ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

தூத்துக்குடி கடம்பூர் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக கூட்டணி!

தூத்துக்குடி கடம்பூர் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக கூட்டணி!

கடம்பூர்

கடம்பூர்

மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக 6 வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும், காங்கிரஸ் மற்றும் மதிமுக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Krishnagiri, India

  தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

  கடம்பூர் பேரூராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து, போட்டியின்றி தேர்வான 3 வேட்பாளர்களை தவிர்த்து மீதமுள்ள 9 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

  அதன்படி கடந்த மாதம் 29ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 9 வார்டுகளில் மொத்தம் ஆயிரத்து 598 ஓட்டுகள் பதிவாகின. வாக்கு இயந்திரங்கள் கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை நடைபெற்றது.

  அதில், மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக 6 வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும், காங்கிரஸ் மற்றும் மதிமுக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கடம்பூர் பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல் காசிம் வழங்கினார்.

  இதையும் வாசிக்க: 2வது நாளாக சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டம்..!

  இதையடுத்து வருகிற 10ம் தேதி உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும்,12ம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தலும் நடைபெற உள்ளது. இதுவரை சுயேச்சைகளின் கையில் இருந்த கடம்பூர் பேரூராட்சி முதன்முறையாக ஒரு அரசியல் கட்சியின் வசம் சென்றதுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: DMK Alliance, Local Body Election 2022, Thoothukudi