ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை ஆளுநர் அனுமதி வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பிய சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், 20 சட்ட மசோதாக்களை முடக்கி வைத்துள்ள ஆளுநரை திரும்ப பெறக் கோரி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தூள்ளார்.
கிருஷ்ணகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறைந்த நாகரத்தினம் அண்ணாஜி பட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது, “கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக முழுவதும் உள்ள திருநங்கைகள் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட திருநங்கைகள் ஏராளமான பிரச்சனைகளை முன் வைத்தனர். திருநங்கைகள் சமூகத்தில் புறக்கணிப்பு செய்வதும், சொல்ல முடியாத அவமானம், இடர்பாடுகளுக்கு ஆளாகுவது, கிண்டலும், கேளிக்கும், ஆளாகும் நிலையில் உள்ளனர்.
இதையும் படிக்க : ஐஐடி பேராசிரியர் பணிகளில் 86% உயர்சாதியினர்... இதுதான் சமூக நீதியா? - பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!
பிறவியில் ஏற்பட்டுள்ள குறைவின் காரணமாக ஒட்டுமொத்த சமூகமே குற்றவாளிகள் போல் பார்க்கக்கூடிய நிலைமை இருக்கிறது. தமிழக முதலமைச்சர் இப்படி சமூகத்தில் அடித்தட்டு விளிம்பில் உள்ள மக்களுக்கு இந்த அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏராளமான படித்த திருநங்கை பட்டதாரிகள் உள்ளனர். அவர்களுக்கு தனியார் நிறுவனங்களும் வேலை வாய்ப்பு தருவதில்லை. எனவே அரசு குறிப்பிட்ட இட ஒதுக்கீடு வழங்கி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், அதேபோல் வீடு இல்லாத நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் “ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் உள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்ன கால்பந்து போட்டியா, கிரிக்கெட் போட்டியா, விளையாட்டு போட்டியா, ஒரு சூதாட்டத்தை தடை செய்ய அனுமதி வழங்க மாட்டேன் என சொல்வது ஏன்? ஆளுநரிடம், எதை கேட்டாலும் ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் வருவதில்லை. இது மட்டும் இல்லாமல் 20வதுக்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை ஆளுநர் முடக்கி வைத்திருக்கிறார். இப்படி சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு இருப்பது மாநில மக்களை துரோகம் செய்கிற, வஞ்சிக்கிற, செயலாக பார்க்கிறோம். எனவே ஆளுநரை திரும்ப பெற வேண்டி வழங்கிய மனுவை வலியுறுத்தி மிகப்பெரிய இயக்கத்தை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்.
இன்றைக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர் பிரச்சினை அதிகரித்து வருகிறது. எந்த தொழில் நிறுவனத்திலும் வேலைக்கு ஆள் எடுப்பது என்பது இல்லை. அரசு அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் ஆள் எடுப்பதில் இல்லை. அப்படியே எடுத்தாலும் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கின்றனர். இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசு மாற்றி உள்ள சட்ட விதிகளால் ஒப்பந்த அடிப்படையில் பணிமையும் செய்கின்றனர். இது இளைஞர்களின் எதிர்காலத்தில் மிகப்பெரிய சோதனையை உருவாக்கவும், இதுபோல் நடவடிக்கையை தமிழக அரசு ஈடுபடக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைதாரருக்கு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக தகவல் வருகிறது. அதை வரவேற்கிறோம். கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சரியாக பின் பற்றாததால், நிதி நிலைமை சீரழிந்துள்ளது. அதனால் தான் திமுக தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது” என்று தெரிவித்தார்.
செய்தியாளர் : குமரேசன் (கிருஷ்ணகிரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CPM, CPM balakrishanan, K.balakrishnan, Online rummy, RN Ravi