ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் கனகதாசரின் 535வது ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்கள் தங்களது குல தெய்வங்களை ஊர்வலமாக எடுத்து வந்து தலைமேல் தேங்காய்களை உடைத்து விநோத நேர்த்தி கடன் செலுத்தினர்.
ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் தாசசிரேஷ்ட பக்த கனகதாச சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் கனகதாசரின் 535 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக குறும்பர் இன மக்கள் தங்களது குல தெய்வங்களான ஸ்ரீ சிக்கம்ம சிவலிங்கேஸ்வரி தேவி, ஸ்ரீ தொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி, ஸ்ரீ லிங்கேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ சிக்க வீரம்மாதேவி, பீரேஸ்வர ஸ்வாமி உள்ளிட்ட தெய்வங்களை தலை மேல் சுமந்தபடி கலாச்சார கலை நிகழ்ச்சிகளாகிய டொள்ளு குனித, வீரகாசே, வீரபத்திர குனித, கம்சாளே, ஆகிய நடனங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து பேருந்து நிலைய பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் வினோத திருவிழா நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் 1008 தேங்காய்களை தலைமேல் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி கொண்டனர்.
இந்த திருவிழாவில் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி கிராம பொதுமக்கள், ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர்.
Also see... சபரிமலையில் நாளை மண்டல பூஜை... தங்க அங்கியில் ஜொலிக்க உள்ள ஐயப்பன்..
கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்திலிருந்து முக்கிய சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு ரத்த தானம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: செல்வா, ஓசூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coconut, Hindu Temple, Hosur