ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

கிறிஸ்துமஸ் திருவிழா: கிருஷ்ணகிரியில் அலங்கார பொருட்களின் விற்பனை துவக்கம் 

கிறிஸ்துமஸ் திருவிழா: கிருஷ்ணகிரியில் அலங்கார பொருட்களின் விற்பனை துவக்கம் 

கிறிஸ்மஸ்

கிறிஸ்மஸ்

Christmas festival 2022 | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு, குடில் அமைப்பதற்கு தேவையான அலங்கார பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri, India

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களின் இல்லங்களிலும், தேவாலயங்களிலும் குடில் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த குடில் அமைப்பதற்குத் தேவையான பொம்மைகள், நட்சத்திர விளக்குகள், பல்வேறு வண்ணங்களில் ஜொலிக்கும் அலங்கார கார்ட்டூன் பொம்மைகள், ஸ்டிக்கர்கள், கிருஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அனைத்து வகையான அலங்கார பொருட்களும் கடைகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் புதிய சாண்டா கிளாஸ் எனப்படும் கிற்ஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

Also see... கடந்த 7 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்: மா.சுப்பிரமணியன்

மேலும், வண்ண வண்ண நட்சத்திரங்களும் பல அளவுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களுடைய வசதிக்கு ஏற்ப , கிறிஸ்துமஸ் குடில்களை வாங்கி தங்களுடைய இல்லங்களை அலங்கரித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி

First published:

Tags: Christmas, Home Decoration, Krishnagiri, Local News