ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

ஓசூரில் கோலாகலமாக நடந்த பழமைவாய்ந்த கெளரம்மா கோவில் திருவிழா...

ஓசூரில் கோலாகலமாக நடந்த பழமைவாய்ந்த கெளரம்மா கோவில் திருவிழா...

கெளரம்மா கோவில் திருவிழா

கெளரம்மா கோவில் திருவிழா

Hosur | ஓசூரில் பழமைவாய்ந்த கெளரம்மா கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Hosur, India

  ஓசூர் அருகேயுள்ள கும்ளாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த கௌரம்மா கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது மண்ணால் செய்யப்பட்ட கௌரம்மா மற்றும் விநாயகர் சிலைகள் இரண்டு தேர்களில் வைக்கப்பட்டு தேர்களை பக்தர்கள் தோள்களில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.

  கௌரம்மா மற்றும் விநாயகர் ஆகிய தெய்வங்களின் சிலைகள் அங்குள்ள 7 ஏரிகளில் இருந்து மண் மற்றும் தண்ணீர் எடுத்து வந்து வடிவமைக்கப்பட்டு கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள கௌரம்மா தேவி கோயிலில் ஒரு மாதம் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன் பின்னர் இரண்டு தெய்வங்களின் சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட 2 தேர்களில் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து சென்று கௌரம்மா ஏரியில் கரைப்பது வழக்கம். இந்த திருவிழா ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

  அந்த வகையில் 7 ஏரிகளில் இருந்து மண் மற்றும் தண்ணீர் எடுத்து வந்து செய்யப்பட்ட கௌரம்மா மற்றும் விநாயகர் சிலைகள் கோயிலில் வைக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. அதனைத்தொடர்ந்து இன்று கௌரம்மா விநாயகர் தேர்த்திருவிழா நடைபெற்றது. கௌரம்மா மற்றும் விநாயகர் சிலைகள் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்களில் அமர வைக்கப்பட்டது.

  அதன் பின்னர் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வித்தியாசமாக பக்தர்கள் கௌரம்மா மற்றும் விநாயகர் சிலைகள் உள்ள 2 தேர்களையும் தங்களது தோள்களில் சுமந்தபடி  ஊர்வலமாக எடுத்து சென்றனர். தேர்கள் மேளதாளங்கள் முழங்க கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதியில் தேர்களை கௌரம்மா ஏரிக்கு கொண்டு சென்று பக்தர்கள் அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி கௌரம்மா மற்றும் விநாயகர் சிலைகளை ஏரி நீரில் கரைத்தனர்.

  Also see... குதிரையில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்திய கூல் சுரேஷ்..!

  இந்த திருவிழாவில் கும்ளாபுரம், தளி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் ஆனெக்கல், சந்தாபுரம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.

  செய்தியாளர்: செல்வா, ஓசூர் 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Hosur, Krishnagiri