முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கொலை முடிந்தது.. ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்..!

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கொலை முடிந்தது.. ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்..!

கொலை செய்யப்பட்ட நபர்

கொலை செய்யப்பட்ட நபர்

Hosur Murder | குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு  கொலையில் முடிந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hosur, India

கிருஷ்ணகிரியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் கெலமங்கலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் அடுத்த அடவி சாமிபுரம் கிராமம் அருகே கிரஷர் பகுதியில் வெங்கடேசன், மோகன் உள்ளிட்ட ஆறு பேர் மது குடித்துள்ளனர். அப்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை மோகன் என்பவர் குடிபோதையில் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானார்.

இந்த நிலையில் உயிருக்கு போராடிய வெங்கடேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்தார். குடிபோதையில் கத்தியால் குத்திய மோகன் என்பவர் தலைமறைவான நிலையில் கெலமங்கலம் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு  கொலையில் முடிந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: செல்வம்

First published:

Tags: Crime News, Hosur, Krishnagiri, Local News