முகப்பு /செய்தி /Krishnagiri / காட்டு ஆமணக்கு காயை சாப்பிட்ட 8 வடமாநில சிறுவர்கள் மயக்கம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

காட்டு ஆமணக்கு காயை சாப்பிட்ட 8 வடமாநில சிறுவர்கள் மயக்கம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

காட்டு ஆமணக்கு காயை சாப்பிட்ட 8 வடமாநில சிறுவர்கள் மயக்கம்..

காட்டு ஆமணக்கு காயை சாப்பிட்ட 8 வடமாநில சிறுவர்கள் மயக்கம்..

பசியின் காரணமாக அந்த காய்களை சாப்பிட்டதாக குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஓசூர் அருகே காட்டு ஆமணக்கு காயை சாப்பிட்ட  8 வட மாநில சிறுவர்கள் மயக்க நிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ஜீமங்கலம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கடந்த மூன்று மாதங்களாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர்,

இவர்கள் பீகாரில் உள்ள தர்ப்பங்க மாவட்டம் ரத்தன் பூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சை சுசிகலா, தேவி தம்பதி மற்றும் ராம்கி பத்சதாப், லட்சுமி தம்பதி என இரண்டு குடும்பத்தினர். இவர்கள் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் சஞ்சை சுசிகலா, தேவி  தம்பதி குழந்தைகளான பவித்ரா (12), சோனா குமாரி (3), 2 பெண் குழந்தைகளும், பிக்கி குமார்(10), பிக்கிராம் (5), விசால் குமார்(3),  என 3 ஆண் குழந்தைகள்,  ராம்கி பத்சதாப், லட்சுமி தம்பதியினரின் குழந்தைகள் சிவானி (7), ராதிகா (5) பார்வதி (3)  பெண் குழந்தைகளும் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, அவர்கள் அங்கிருந்த காட்டு ஆமணக்கு செடியில் உள்ள காய்களை சாப்பிட்டுள்ளனர். பசியின் காரணமாக அந்த காய்களை சாப்பிட்டதாக குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர். இதனால் சிறுவர்கள் 8 பேரும் காட்டு ஆமணக்கை சாப்பிட்டு மயக்கமடைந்ததால் பெற்றோர்கள் அப்பகுதி மக்கள் உதவியுடன் ஒசூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

செய்தியாளர் - ஓசூர் செல்வா.

First published:

Tags: Hosur, Krishnagiri