ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

வீட்டில் பதுங்கியிருந்த 7அடி கோதுமை நாகம்... கிருஷ்ணகிரி மக்கள் பீதி....

வீட்டில் பதுங்கியிருந்த 7அடி கோதுமை நாகம்... கிருஷ்ணகிரி மக்கள் பீதி....

கோதுமை நாகம்

கோதுமை நாகம்

Krishnagiri News : கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டிணம் அருகே வீட்டுக்குள் இருந்த 7 அடி நீளம் உள்ள நாகப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Krishnagiri, India

  கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் முனுசாமி. இன்று மாலை தன் வீட்டிலிருந்து வெளியில் சென்றார். அப்போது வீட்டின் கேட்டிலிருந்து காம்பவுண்ட் சுவர் அருகில் சென்றபோது பெரிய பாம்பு சென்றதை பார்த்தார். உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

  அதன்படி விரைந்து வந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான  தீயணைப்பு வீரர்கள் காம்பவுண்ட் சுவர் அருகில் பதுங்கியிருந்த 7 அடி கோதுமை நாகத்தை லாவகமாக பிடித்தனர்.

  பாம்பு பெரிய அளவில் இருப்பதால் கூண்டுக்குள் பத்திரமாக அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின் காப்புக்காட்டில் விடப்படும் என தீயனைப்பு துறையினர் தெரிவித்தனர்.

  இதையும் படிங்க : மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் ராமஜெயம் கொலை வழக்கு: ரவுடிகளிடம் மருத்துவ பரிசோதனைகள் நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு

  இதேபோல், இன்று காலை முதல்  கிருஷ்ணகிரி பழையபேட்டை மற்றும் பூந்தோட்டம் ஆகிய பகுதியில் மேலும் இரு நாகபாம்புகளும் பிடிபட்டன என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

  கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் பெய்த தொடர்மழையால் பெரும்பாலான பகுதிகளில் புதர் மண்டியுள்ளது. இதனால் பாம்புகள் வீடுகளுக்குள் புகுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே வீட்டில் அருகில் உள்ள புதர்களை அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்ளும்படி பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தினர். கிருஷ்ணகிரியில் சிக்கும் தொடர் பாம்புகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

  செய்தியாளர் : குமரேசன் - கிருஷ்ணகிரி

  Published by:Karthi K
  First published:

  Tags: Krishnagiri