ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

4000 ஆண்டுகளுக்கு பழைமையான காட்டெருமை பாறைக் கீறல் உருவம் கிருஷ்ணகிரியில் கண்டுபிடிப்பு..!

4000 ஆண்டுகளுக்கு பழைமையான காட்டெருமை பாறைக் கீறல் உருவம் கிருஷ்ணகிரியில் கண்டுபிடிப்பு..!

பாறைக் கீறல் கண்டுபிடிப்பு

பாறைக் கீறல் கண்டுபிடிப்பு

Krishnagiri | கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காட்டெருமை பாறைக் கீரல் உருவத்தை வரலாற்று ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Krishnagiri, India

    கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் வழிகாட்டுதலின்பேரில் தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடைப்பெற்று வருகிறது. மயிலாடும்பாறை என்னும் இடத்தில் 4200 ஆண்டுகளுக்கு முன் மனிதன் இரும்பு பயன்பாடு இருந்ததை கண்டறியப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து 2 கி.மீ., தொலைவில் ஐகுந்தம் அருகில் உள்ள மூலைக்கொல்லை பகுதியில் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.

    வரலாற்றுக் குழு ஆய்வில் அங்குள்ள குன்றில், ஒரு விலங்கின் உருவம் பாறைக் கீறலாக இருப்பது கண்டறியப்பட்டது. இதுபற்றி கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அந்த ஓவியம் பாறையில் கல்லால் கொத்தி தேய்த்து உருவாக்கப்பட்ட பாறைக் கீறல் உருவம். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலக் கலாச்சாரத்தை சேர்ந்த பாறைக் கீறல் இது.

    இது போன்ற விலங்கின் பாறைக் கீறல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டது இதுவே முதல் முறையாகும். கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இத்தகைய விலங்கு உருவ பாறைக் கீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது ஒரு காட்டெருமையின் உருவமாகும். சுமார் 3.5 அடி நீளம் மற்றும் 4.8 அடி உயரமுடையதாக உள்ளது.

    கீறல் சுமார் அரை முதல் ஓர் அங்குல அகலமுடையதாய் உள்ளது. இக்கீறல் நன்கு தேய்த்து வழவழப்பாக்கப்பட்டுள்ளது. இவ்விலங்கு தலையை மேல்நோக்கி துாக்கியிருக்கிறது. முகம் சிறியதாயும் கூர்மையாகவும் உள்ளது. இரு கொம்புகளும் பெரியதாய் ஒரு வட்டம் போன்று உள்ளது.

    இந்தியாவின் பிற இடங்களில் செங்காவியில் வரையப்பட்டுள்ள உருவத்தை இது பெரும்பகுதி ஒத்துள்ளது. அருகே இதே அளவில் இன்னொரு விலங்கின் உருவமும் தெளிவில்லாமல் உள்ளது. ஒரு மயில் தோகை விரித்து நேரே நிற்பது போன்ற கீறலும் காணப்படுகிறது. இப்பாறையில் 3 இடங்களில் புத்த பாதம் அல்லது விஷ்ணு பாதம் போன்று கீறப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு செருப்புப் போன்று உள்ளதால் செருப்படிச்சான் பாறை என்று உள்ளுர் மக்களால் அழைக்கப்படுகிறது”என்று தெரிந்தார்.

    இந்த அறிய கண்டுப்பிடிப்பை நேரில் பார்வையிட்டு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், ‘ தமிழக முதலமைச்சர் ஏற்கெனவே சட்டசபையில் குறிப்பிட்டது போல, மயிலாடும்பாறை பகுதியில் தமிழக வரலாற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சக் கூடிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வெளிவருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இரும்பின் பயன்பாடு 4000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டதாக வெளிவந்த அறிவியல் காலக் கணிப்பை உறுதி செய்யும் விதத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் அதே காலத்தை சேர்ந்த செங்காவி ஓவியம் மற்றும் கற்திட்டைகளின் தொடக்கத்தினையும் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர்.

    தற்போது கண்டறியப்பட்டுள்ள இப்பாறைக் கீறலும் புதிய கற்காலத்தின் ஒரு கீறாக உள்ளதால், இப்பகுதியில் புதிய கற்காலம் நன்கு வேறூன்றி இருந்ததும், அக்கலாச்சாரத்தின் இடையிலேயே இரும்புக் காலம் எனப்படும் பெருங்கற்படைக் காலம் உருவாகத் தொடங்கியிருப்பதையும் நன்கு உணர முடிகிறது.

    தமிழக முதல்வர் சட்டசபையில் கூறியதுபோல், இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருந்துதான் எழுதப்படும் என்று கூறிய கூற்றை இப்பாறை கீறல் மேலும் வலுப்படுத்துகிறது என தெரிவித்த அவர் இந்த வரலாற்று தொன்மையின் சிறப்புகளால் தமிழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெருமை அடைகிறது என குறிப்பிட்டார்.

    Also see... வீரப்பூரில் கோலாகலமாக நடந்த வேடபரி விழா..

    இந்த வரலாற்று சிறப்புமிக்க தொன்மை கொண்டுள்ள இந்த கீறல் ஓவியத்தை அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்:ஆ.குமரேசன்,கிருஷ்ணகிரி

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Archaeology, Krishnagiri