ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

குட்டிகளுடன் குடியிருப்பை சூழ்ந்த 40 யானைகள்.. ஓசூரில் பொதுமக்கள் பீதி..!

குட்டிகளுடன் குடியிருப்பை சூழ்ந்த 40 யானைகள்.. ஓசூரில் பொதுமக்கள் பீதி..!

மாதிரி படம்

மாதிரி படம்

Hosur : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதியில் 40 யானைகள் தஞ்சம் அடைந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Hosur, India

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை அருகே குட்டிகளுடன் சுமார் 40 யானைகள் தஞ்சம் அடைந்துள்ளன. இந்த யானைகள், ஊதே தூர்க்கம் என்ற ஊர் வழியாக ஓசூர் சாணமாவு வனப்பகுதிக்கு சென்ற நிலையில், யானைகள் கூட்டமாக இடம் பெயர்ந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதியில் யானை கூட்டம் தஞ்சம் அடைந்திருப்பதால் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக சாணமாவு, பீர்ஜேப்பள்ளி, ஆழியாளம், போடுர், நாயக்கணப்பள்ளி, கொத்தப்பள்ளி, பீன்னிகள் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். எனவே யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே கிராம மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

First published:

Tags: Elephant, Krishnagiri, Local News