கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 வயது இளைஞரின் சிறுநீரகப் பையில் இருந்த 13 சென்டிமீட்டர் அளவிலான 300கிராம் எடை கொண்ட கல்லை மருத்துவர்கள் அகற்றினர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2ஆம் தேதி கடுமையான வயிற்றுவலியும் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருப்பதாகவும் கூறி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான அருள் என்ற இளைஞர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது சிறுநீரக பையில் சுமார் 13 சென்டிமீட்டர் அளவு கொண்ட 300 கிராம் எடைக்கொண்ட கல் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த இளைஞருக்கு உடனடியாக சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் விஜயன் மற்றும் டாக்டர் தமிழ் முத்து ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
Must Read : பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை பக்கெட் நீரில் மூழ்கடித்து கொன்ற கொடூரம் - தாயும் மகளும் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்
இந்த அறுவை சிகிச்சையில் இளைஞரின் சிறுநீரக பையில் இருந்து 300 கிராம் எடை கொண்ட கல்லினை அகற்றினர். தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த இளைஞர் நலமுடன் இருப்பதாகவும் சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு இல்லாமல் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் - ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி
உங்கள் நகரத்திலிருந்து(Krishnagiri)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.