ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

எடப்பாடி பழனிசாமிக்கு 300 கிலோ ஆப்பிள் மாலை.. கிரேனில் தூக்கிவந்த தொண்டர்கள்!

எடப்பாடி பழனிசாமிக்கு 300 கிலோ ஆப்பிள் மாலை.. கிரேனில் தூக்கிவந்த தொண்டர்கள்!

அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடிக்கு பழனிசாமிக்கு அணிவிக்கப்பட்ட 300 கிலோ ஆப்பிள் மாலை

அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடிக்கு பழனிசாமிக்கு அணிவிக்கப்பட்ட 300 கிலோ ஆப்பிள் மாலை

EPS | ஸ்டாலின் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Krishnagiri, India

  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அதிமுகவின் 51-ம் ஆண்டு தொடக்கவிழா பொதுகூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

  அப்போது, கூட்டத்தில் அவர் பேசியதாவது, “விளையும் பயிர் முளையிலேயே தெரியும். அதுபோல தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற இங்கு கூடியுள்ள கூட்டமே சாட்சி. திமுக பொதுக்குழுவில் தனது தூக்கமே போச்சு என்று பேசிய ஸ்டாலினால் திமுகவை ஒழுங்காக வழிநடத்த முடியவில்லை.

  ஸ்டாலின் கருணாநிதியின் மகன் என்பதால் திமுக தலைவர் ஆனார். ஆனால் அதிமுகவில் அடிமட்ட தொண்டர் கூட தலைவராக வரலாம் என்பதற்கு நானே சாட்சி. ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராக தமிழகத்தில் இருந்து வருகிறார்.

  இதையும் படிங்க : ’நீங்கள் பெரியாருக்கு நன்றி சொல்லிவிட்டுதான் கையெழுத்திடவேண்டும்’ - அண்ணாமலையை சாடிய சு. வெங்கடேசன்!

  கட்சியையும் நடத்த முடியவில்லை. ஆட்சியையும் நடத்த முடியாமல் திணறுகிறார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளே புலம்புகிறார். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது.

  ஆட்சி கட்டில் அமர்ந்து மக்களை ஏமாற்றுபவர் ஸ்டாலின். ஸ்டாலின் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. அரசியல் ரீதியாக அதிமுகவை சந்திக்க தைரியம் இல்லாத ஸ்டாலின் அதிமுக மீது பொய் வழக்குகளை போடுகிறார்,” என்று பேசினார்.

  இந்நிலையில், கூட்டத்தின் இறுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு 300 கிலோ எடைகொண்ட ஆப்பிள் மாலையை கிரேன் மூலம் அதிமுக தொண்டர்கள் அணிவித்தனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: ADMK, EPS, Krishnagiri