ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

நகைக்கடையின் சுவரில் ஓட்டை போட்டு 30 சவரன் நகை கொள்ளை.. கிருஷ்ணகிரியில் பயங்கரம்!

நகைக்கடையின் சுவரில் ஓட்டை போட்டு 30 சவரன் நகை கொள்ளை.. கிருஷ்ணகிரியில் பயங்கரம்!

நகைக்கடையில் கொள்ளை

நகைக்கடையில் கொள்ளை

Krishnagiri theft | சிசிடிவி கேமராவையும் திருடி சென்றதால் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri | Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நகைக்கடையின் சுவற்றில் துளையிட்டு 30 சவரன் நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீவிக்னேஷ்வர் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு நகைக்கடைக்குள் புகுந்த மர்ம கொள்ளை கும்பல் நகைக்கடையின் பின்பகுதியில் சுவரில் துளையிட்டு உள்ளே சென்று கடையில் இருந்த தங்க நகைகள், வெள்ளி நகைகள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இன்று காலை வழங்கம் போல் கடையின் உரிமையாளர் சேகர் கடையை திறந்து பார்க்கும்போது உள்ளே இருந்த நகைகள் கொள்ளையடித்து இருப்பதை கண்டு அதிர்ச்சியைடந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் தகவல் அளித்தார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நகைக்கடையில் இருந்து 30 பவுன் தங்க நகை 25 கிலோ வெள்ளி நகைகள் உள்ளிட்டவை கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது.மேலும் கொள்ளையர்கள் நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் திருடி சென்றதால் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நகைகடையின் சுவரில் துளையிட்டு நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி.

First published:

Tags: Krishnagiri, Local News, Theft