Home /News /krishnagiri /

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 30 சவரன் நகை கொள்ளை... கிருஷ்ணகிரியில் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 30 சவரன் நகை கொள்ளை... கிருஷ்ணகிரியில் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கிருஷ்ணகிரியில் மூதாட்டியை தாக்கி 30 பவுன் நகை 5 கிலோ வெள்ளி கொள்ளை...

கிருஷ்ணகிரியில் மூதாட்டியை தாக்கி 30 பவுன் நகை 5 கிலோ வெள்ளி கொள்ளை...

Krishnagiri | கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மூதாட்டியை தாக்கி 30 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த தொடர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri, India
    கிருஷ்ணகிரி,  பர்கூரில்  தாலுகா ஆபிஸ் எதிரேயுள்ள வாணியம்பாடி ரோட்டில்  60 வயதான பரிமளா என்பவர் வசித்து வருகிறார்.  மூதாட்டியின் குழந்தைகள் இருவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு ஒன்றரை மணி அளவில் பரிமளா தனது வீட்டில் இருந்துள்ளார். 

    வீட்டில் மூதாட்டி  தனியாக இருப்பதை அறிந்த  மர்ம நபர்கள் அவரை தாக்கி கழுத்தில் இருந்த செயின், வீட்டில் இருந்த 30 பவுன் நகை மற்றும் 8 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர்.  கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் என கூறப்படுகிறது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து பர்கூர் காவல்துறையினர் வழக்கு  பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் இதே பகுதியில் தொடர்ந்து ஐந்து முறை வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. தொடர் கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Gold Robbery, Krishnagiri

    அடுத்த செய்தி