ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

கிருஷ்ணகிரியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்... பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..

கிருஷ்ணகிரியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்... பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..

கிருஷ்ணகிரியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்

கிருஷ்ணகிரியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்

Krishnagiri District News | யானைகளை  பட்டாசுகள் மற்றும் பானங்கள் மூலம் துரத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Krishnagiri, India

  கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சிப்காட் பகுதியில் இன்று காலை மூன்று காட்டு யானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  கிருஷ்ணகிரியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சோக்காடி, பனகமுட்லு மற்றும் மேலுமலை வனப்பகுதியில் இருந்த மூன்று காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது. இந்த காட்டுயானைகளை கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்கு உட்பட்ட  சானமாவு வனபகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

  இந்நிலையில், 10 நாட்களுக்கு மேலாக பிக்கனபள்ளி மற்றும் மேலுமலை வனப்பகுதியில் வந்து முகாமிட்டிருந்த நிலையில் இன்று காலை திடீரென குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்கு புகுந்த மூன்று காட்டு யானைகள் சிப்காட் வளாகத்திற்குள் முகாமிட்டுள்ளது.

  இதையும் படிங்க : சீர்காழி பேய் மழைக்கு மேகவெடிப்பு காரணமா..? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

  அப்பகுதியில் இருந்த யானைகளை கண்டு சிப்காட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தலை தெறிக்க  ஓடினர். தகவலறிந்து வந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் யானைகளை  பட்டாசுகள் மற்றும் பானங்கள் மூலம் துரத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காட்டுயானைகள் சிப்காட் பகுதிக்குள் புகுந்ததால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  செய்தியாளர் : ஆ.குமரேசன் - கிருஷ்ணகிரி

  Published by:Karthi K
  First published:

  Tags: Elephant struggles, Krishnagiri