ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

கிருஷ்ணகிரியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்... பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை - யானைகளை விரட்டும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்... பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை - யானைகளை விரட்டும் பணி தீவிரம்

3 காட்டு யானைகள்

3 காட்டு யானைகள்

Krishnagiri | கிருஷ்ணகிரி அருகே முகாமிட்டுள்ள மூன்று காட்டு யானைகளை மூன்றாவது நாளாக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Krishnagiri, India

  தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை சோக்காடி போன்ற சிறு வனப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மூன்று  காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.அவை அவ்வப்போது காட்டுபகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள விளை நிலங்களில் நுழைந்து வாழை, நெல், கரும்பு போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.இதனால் விவசாயிகள் பொதுமக்கள் கலக்கமடைந்தனர்.

  இதையடுத்து ராயக்கோட்டை வனத்துறையினர் காட்டு யானைகளை பட்டாசு வெடித்து ஆழப்பட்டி வன சரகத்திற்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சி தோல்வி அடைந்தது. அதன் பிறகு அந்த மூன்று யானைகள் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் நீர்த்தேக்கம் அருகே உள்ள பச்சிக்கானபள்ளி, மற்றும் வெங்கிகானப்பள்ளி, கிராமத்தில் உள்ள விளை நிலத்தில் முகாமிட்டது. அப்போது யானைகளை காண ஏராளமான மக்கள் திரண்டதால் யானைகளை விரட்டும் முயற்சியில் சிரமம் நேரிட்டது.

  அதிக அளவில் கிராமங்கள் கொண்டுள்ள பகுதி என்பதால் யானைகளை விரட்டுவது தொடர்பாக கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது. விளைநிலங்களில் காவலுக்கு செல்லக்கூடாது. என்கிற அறிவுரைகள் வழங்கப்பட்டு கிராம மக்கள் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Also see...இன்று கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

  அப்போது யானைகள் பொதுமக்களை நோக்கி ஆக்ரோஷமாக விரட்டும் சம்பவம் நடைபெற்றதால் மிகுந்த கவனத்துடன் வனத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். கிராம பகுதியில் யானைகள் முகாமிட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்து உள்ளனர். மூன்றாவது நாளாக யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் : கிருஷ்ணகிரி,ஆ.குமரேசன்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Elephant, Farmers, Krishnagiri