ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை - கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை - கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கில்  சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை

Crime News : கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல்பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 35) கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.  இவர் கடந்த 2018-ம் ஆண்டு, அதே  பகுதியை சேர்ந்த ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்கள் கழித்து கல்லூரி மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனையில் பரிசோதித்த போது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. பின்னர் இதுகுறித்து மாணவியிடம் பெற்றோர்கள் கேட்டபோது அவர் உண்மையை கூற மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழரசனிடம் கேட்டுள்ளனர் அதற்கு தமிழரசன் மாணவியின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை எனக்கூறி தகராறு செய்துள்ளார். இந்நிலையில், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது மாணவிக்கு ஆண்குழந்தை பிறந்தது ஆனால் குழந்தை பிறந்த சில மணித்துளிகளிலேயே இறந்து விட்டது.

இந்த நிலையில் அதிக ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியும் கடந்த 2019 ஜனவரி மாதம் இறந்துவிட்டார். இந்த நிலையில் மகளை கர்ப்பமாக்கி, ஏமாற்றியதாக கல்லூரி மாணவியின் பெற்றோர் கல்லாவி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்று கொண்ட போலீசார்  போக்சோ சட்டத்தில் தமிழரசனை போலீசார் கைது செய்தனர்.

Also Read:  நள்ளிரவில் அம்மாவை பார்த்து அதிர்ந்துபோன மகள்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தை - நடந்தது என்ன?

மேலும் இறந்த குழந்தையின் டி.என்.ஏ., பரிசோதனையில் இறந்த குழந்தை மற்றும் தமிழரசனின்  டி.என்.ஏ.,க்கள் பொருந்தியதால் தமிழரசன் போலீசாரிடம் வசமாக  சிக்கினார். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற் று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதா  தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட தமிழரசனுக்கு,  மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை 5,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

செய்தியாளர்: ஆ.குமரேசன் (கிருஷ்ணகிரி)

First published:

Tags: Crime News, Krishnagiri, Local News, Sexual harrasment, Tamil News