ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

குழந்தைகள் தின விழா: அரசுப்பள்ளிக்கு 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கல்வி சீராக வழங்கிய பெற்றோர்கள்

குழந்தைகள் தின விழா: அரசுப்பள்ளிக்கு 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கல்வி சீராக வழங்கிய பெற்றோர்கள்

கல்வி சீர் வழங்கிய பெற்றோர்கள்

கல்வி சீர் வழங்கிய பெற்றோர்கள்

ஓசூர் மாநகராட்சி பேடரப்பள்ளி பகுதியில் இயங்கி வரும் அரசுப்பள்ளிக்கு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள், சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ளபல்வேறு பொருட்களை கல்வி சீராக வழங்கினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Hosur, India

  ஓசூர் மாநகராட்சி பேடரப்பள்ளி பகுதியில் இயங்கி வரும் அரசுப்பள்ளிக்கு மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பள்ளிக்கு தேவையான பல்வேறு பொருட்களை கல்வி சீராக வழங்கினர்.

  முன்னாள் பாரத பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான நேற்று நாடு முழுவதும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஓசூர் பகுதிகளிலும் குழந்தைகள் தின விழா அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பேடரப்பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

  இந்தப்பள்ளி இட வசதி பற்றாக்குறை காரணத்தால் பள்ளியானது மூன்று இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை 960 மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயின்று வருகின்றனர். நம் பள்ளி நம் பெருமை என்பதை வலியுறுத்தி குழந்தைகள் தின விழாவில் பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான கல்வி சீர் பொருள்களை வழங்கலாம் என பள்ளி மேலாண்மை குழுவினர் தெரிவித்திருந்தனர்.

  அதன்பேரில் நேற்று அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் கல்வி சீராக பீரோ, நாற்காலி, பாய், அலமாரிகள் உள்ளிட்ட பள்ளிக்கு தேவையான பல்வேறு வகையான பொருள்களை சீராக கொண்டு வந்தனர். பின்னர் அந்த பொருள்களை மாணவர்களுடன் பெற்றோர்கள் பள்ளிக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

  Also see...கிள்ளனூர் பகுதியில் உள்ள கோயிலில் திருடிய கும்பலை பிடித்த பொதுமக்கள்.....

  பின்னர் அரசுப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் சீர் பொருட்களை ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து பள்ளியில் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

  செய்தியாளர்: செல்வா, ஓசூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Children's Day, Government school