ஹோம் /நியூஸ் /கிருஷ்ணகிரி /

ஜாமீனில் வெளிவந்த இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை... பழிக்குப்பழியாக அரங்கேறிய கொலையா?

ஜாமீனில் வெளிவந்த இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை... பழிக்குப்பழியாக அரங்கேறிய கொலையா?

கொலை

கொலை

கடந்த பிப்ரவரி மாதம் அரங்கேறிய கொலையில் கைது செய்யப்பட்டவர் என கண்டுபிடிப்பு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Hosur, India

  ஓசூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியை சேர்ந்த முரளி (19) என்பவரை அவரது வீட்டில் இருந்து 2 பேர் காரில் அழைத்து சென்றுள்ளனர். மது குடிப்பதற்காக அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் அவர்கள் அலசநத்தம் சாலையில் பெத்தகொள்ளு என்னும் இடத்தில் உள்ள தனியார் லேஅவுட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மதுபாட்டில்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்து வைத்த அவர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து முரளியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அவரை கொலை செய்தவர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

  இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் முரளி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

  இதையும் படிங்க | குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம்... சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!

  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில்,

  ஓசூர் அந்திவாடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலாளி உதயகுமார் ( 32)  என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டதும், இந்த கொலை வழக்கில் முரளி முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

  கைது செய்யப்பட்ட முரளி, தற்போது தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது கொலை செய்யப்பட்டிருப்பதால் பழிக்கு பழியாக நடந்த கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை செய்த இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  செய்தியாளர்: செல்வம், ஓசூர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Hosur, Krishnagiri, Murder