Home /News /krishnagiri /

கிருஷ்ணகிரியில் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 172 கல்குவாரிகள் - ஆர்டிஐ மூலம் அம்பலம்

கிருஷ்ணகிரியில் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 172 கல்குவாரிகள் - ஆர்டிஐ மூலம் அம்பலம்

கல்குவாரி

கல்குவாரி

krishnagiri : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 172 கல்குவாரிகள் அனுமதியின்றி இயங்கி வந்ததும், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் கடத்தப்பட்டதற்கான ஆவணங்களை கனிமவளத்துறை பராமரிக்காததும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri, India
    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 345 கல்குவாரிகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருவதும், இதில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மட்டும் 233 கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதே நேரம் 2011 முதல் 2021 வரை, 172 கல்குவாரிகள் உரிமமின்றி செயல்பட்டது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி மூலம் அம்பலமாகியுள்ளது.

    இதேபோல், கிரானைட் கற்கள் கடத்தல் மற்றும் கைது நடவடிக்கை குறித்து 2019 முதல் 2022 வரை 667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல் கூறுகிறது. எனினும் இதுவரை கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை தர கனிமவளத்துறை மறுத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த ஆண்டில் மட்டும் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரிகளுக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி இயங்கிய குவாரிகளுக்கு சீல் வைக்கப்படாமல், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறைக்கு கனிமவளத்துறை பரிந்துரை மட்டுமே செய்துள்ளது.

    Must Read : சகோதரி அஸ்வினி குரல்.. திமுக ஆட்சிக்கு கொடுத்த சம்மட்டி அடி - அண்ணாமலை பேச்சு

    கல் குவாரி


    சட்டத்துக்கு புறம்பாக கடத்தப்பட்ட கிரானைட் கற்களின் மதிப்பு குறித்த கேள்விக்கு, அதுதொடர்பான பதிவேடுகள் மாவட்ட கனிமவளத்துறையிடம் பராமரிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த 10 ஆண்டுகளில் சட்டவிரோதமாக இயங்கிய 172 கல்குவாரிகள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    செய்தியாளர் - ஆ.குமரேசன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Krishnagiri, Quarry, RTI

    அடுத்த செய்தி