Home /News /krishnagiri /

பர்கூர் அருகே 17 வயது சிறுவன் இரும்பு கம்பியால் அடித்து கொலை - குற்றவாளியை கிராமத்தை விட்டே வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை

பர்கூர் அருகே 17 வயது சிறுவன் இரும்பு கம்பியால் அடித்து கொலை - குற்றவாளியை கிராமத்தை விட்டே வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை

17 வயது சிறுவன் இரும்பு கம்பியால் அடித்து கொலை

17 வயது சிறுவன் இரும்பு கம்பியால் அடித்து கொலை

Krishnagiri district News: கிருஷ்ணகிரி அருகே பாலேப்பள்ளி கிராமத்தில் முன் விரோதம் காரணமாக 17 வயது சிறுவன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பாலேப்பள்ளி கிராமம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர்  குப்புசாமி. பாலேப்பள்ளி கிராமத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் முருகேசன் (வயது 17) ஒன்பதாம் வகுப்பு படித்திருந்த நிலையில் படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலை செய்து வருகிறார்.

  இந்த நிலையில் சிறுவன் முருகேசன் நேற்று இரவு கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்று வீட்டுக்கு சென்ற நிலையில். இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கப்பட்டு பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு, கோவில் அருகிலேயே சடலமாக கிடந்துள்ளார்.

  இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்,  கந்திகுப்பம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யப்பட்டு உயிரிழந்த முருகேசன் வீட்டின் அருகே உள்ள பிரபு என்பவரை கைது செய்து முதற்கட்டமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த விசாரணையில் அதே கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் விபத்து அல்ல சதி என முருகேசனின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகார் அளித்த சில மாதங்களில் முருகேசன் தாய் காணாமல் போயுள்ளார். தற்போது வரையில் அவர் இருக்கும் இடம் கண்டறியப்படவில்லை.

  அதேபோல் கைது செய்யப்பட்டுள்ள பிரபுவின் தந்தை முனியப்பன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். அதில் சந்தேகம் இருப்பதாக அருகே இருந்தவர்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் பிரபு மற்றும் அவருக்கு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கும், குப்புசாமி அவரது மகன்  கொலை செய்யப்பட்ட  முருகேசன் என்கிற சிறுவனுக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

  இதனால் திட்டமிட்டு பிரபு மற்றும் சிலர் இணைந்து நேற்று இரவு கோவில் திருவிழாவில் பங்கேற்று விட்டு திரும்பிய முருகேசனை இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கி கொலை செய்து உடலை கோவில் அருகே எடுத்துச் சென்று போட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபு மற்றும் அவரது உறவினர்கள் முருகேசனிடம் நேற்று இரவு வாக்குவாதம் செய்ததை கிராம மக்கள் சிலர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதன் அடிப்படையில் தற்போது போலீசார் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Must Read : புதுச்சேரியில் 3 நாள் உணவு மற்றும் ஒயின் திருவிழா... விதவிதமான ஒயின் வகைகள் ஏற்பாடு - அமைச்சர் தகவல்

  இந்நிலையில்,  பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு கொலைகளை செய்திருப்பதாகவும் தற்போது 17 வயது சிறுவனையும் கொலை செய்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், இவர்களால் கிராமத்திற்கு அச்சம் நிலவுகிறது தொடர் கொலை சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் கிராமத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் எனவும் கிராம மக்கள் போலீசாரிடம் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் - ஆ.குமரேசன்
  Published by:Suresh V
  First published:

  Tags: Crime News, Krishnagiri, Murder

  அடுத்த செய்தி