முகப்பு /செய்தி /கரூர் / கிணற்றில் விழுந்த ஆடு... காப்பாற்ற முயன்ற இளைஞர் உயிரிழந்த சோகம்! - கரூரில் அதிர்ச்சி

கிணற்றில் விழுந்த ஆடு... காப்பாற்ற முயன்ற இளைஞர் உயிரிழந்த சோகம்! - கரூரில் அதிர்ச்சி

கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

Karur News : கரூரில் கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்கச்சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாராபுரத்தனுர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணி மகன் ராஜா(23). இவர் இன்று அந்த பகுதியில் உள்ள பொட்டல்காட்டில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அருகே பயன்படாத கிணற்றின் அருகே ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தது.  இந்நிலையில், அதில் ஒரு ஆடு கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜா அந்த ஆட்டை காப்பாற்ற கிணற்றில் இறங்கினார். அப்போது அவர் நிலை தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனால் அவர் கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தம்கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் பொதுமக்கள் கிணற்றில் இறங்கி ராஜாவை தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.

இதையடுத்து, பொதுமக்கள் உடனே முசிறி தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ராஜாவின் சடலத்தை மீட்டனர். ராஜாவின் சடலத்தை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரின் சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடு மேய்க்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : கார்த்திகேயன் - கரூர்

First published:

Tags: Karur, Local News