ஹோம் /நியூஸ் /Karur /

FREE FIRE தடை பண்ணுங்க.. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

FREE FIRE தடை பண்ணுங்க.. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

Ban Free Fire: , டிப்ரஷனா இருக்கு, யாரும் கேம்முக்கு அடிக்ட் ஆகாதீங்க என வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைத்துவிட்டு சஞ்சய் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கரூரில் இளைஞர் ஒருவர்  தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பிரீ பையர் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பதிவிட்டு தற்கொலை   செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகர் 5வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சத்யபாமா. இவரது மகன் சஞ்சய் (23). இவர் தந்தை ராஜலிங்கம் மனைவியை பிரிந்ததால் சஞ்சய் தாயுடன் வசித்து வந்தார். கேட்டரிங் படித்துள்ள சஞ்சய் மேற்படிப்பு படிக்க வைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சஞ்சய் ஆன்லைனில் பிரீ பயர் விளையாட்டு, ஆன்லைன்  ரம்மி  ஆகியவற்றை விளையாடி வந்ததாகவும், ஒரு சில முறை வெற்றிப்பெற்றதால்  அதற்கு அடிமையானதகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சஞ்சய் ஐடியை யாரோ ஹேக் செய்து  தோற்றதால் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,00,00 வரை எடுக்கப்பட்டதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த சஞ்சய் ’கேம்முக்கு யாரும் அடிக்ட்  ஆகாதாதீங்க, என்ன மாதிரி ஏமாறாதீங்க. எதாவது சாதிங்க’ என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆவினில் தயாரிக்கப்படாத பொருளை எப்படி வாங்க முடியும்.. அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் நாசர் விளக்கம்

மேலும், ‘கூட இருந்தே எப்படிடா குழிப்பறிக்க தோணுது. இப்பவும் ஒண்ணு இல்ல. யார்னு சொல்லிடுங்க  வேறு நம்பர்ல இருந்து அனுப்பியிருங்கடா ஐடி பாஸ் என்றும், டிப்ரஷனா இருக்கு, யாரும் கேம்முக்கு அடிக்ட் ஆகாதீங்க எனவும் ஸ்டேடஸ் வைத்துள்ளார். இதனால்,  ஆன்லைனில்  ஃப்ரீ பயர், ரம்மி விளையாட்டுக்கு அடிமையாக இருந்த சஞ்சயின் ஐடியை யாரோ  ஹேக் செய்து விளையாடி அவர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட விரக்தியில்  தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகக்கூறி அவர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அனைவரும் பகிர்ந்து வருவதால் அவர் வசிக்கும் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விக்னேஷ் காவல் மரணம்: போலீசார் 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

இது குறித்து சஞ்சய் நண்பர் அளித்த பேட்டியில், ’ ஃபீரி ஃபயர் விளையாடிதான் சஞ்சய் இறந்துள்ளார். ஆனால், காவல்துறையினரும், அவனின் உறவினர்களும் இதனை மறைக்கின்றனர். ஒருசில விளையாட்டில் வெற்றி பெற்றதால் அவன் தொடர்ந்து விளையாடி உள்ளனர். யாரோ அவனது ஐடியை ஹேக் செய்து அவனுக்கு கிடைத்த பரிசு பணத்தை வைத்து  விளையாடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் விரத்தியில் அவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான்’ என குறிப்பிட்டார்.

செய்தியாளர்: கார்த்திகேயன் - கரூர்

First published:

Tags: Addicted to Online Game, Commit suicide, Game