ஹோம் /நியூஸ் /கரூர் /

சோமவார விழா.. 1017 படிகள் உருண்டு உருண்டே மலையேறி சாமி தரிசனம் செய்த இளைஞர்..!

சோமவார விழா.. 1017 படிகள் உருண்டு உருண்டே மலையேறி சாமி தரிசனம் செய்த இளைஞர்..!

தேனி

தேனி

Ayyarmalai | கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில், இளைஞர் ஒருவர் 1017 படிகள் உருண்டு ஏறி சாமி தரிசனம் செய்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India

குளித்தலை அருகே அய்யர்மலையில் உலக அமைதிக்காகவும், மக்கள் பசி பட்டியின்றி வாழ 13 வது முறையாக, 1017 படிக்கட்டுகள் கொண்ட மலை உச்சிக்கு உருண்டு, ஏறி இளைஞர் ஒருவர் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சுமார் 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவத்தளத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இந்த மாதத்தின்  4வது சோமவார விழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பக்தர்கள், குடிப்பாட்டுக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டு காரர்கள், தேங்காய் பழம் உடைத்து சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

இந்த 4வது சோமவார விழாவில் குளித்தலை அருகே நங்கவரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்ற இளைஞர் 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். இவரது தாத்தா நாகராஜன் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக உலக அமைதிக்காகவும், மக்கள் பசி பட்டினி இன்றி நல்வாழ்வு வாழ்ந்திடவும்,  1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வந்தார்.

Also see... காட்டுக்குள் அம்மன் கோயில்.. திடீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 பெண்கள்.. உதகையில் பரபரப்பு!

அவரது மறைவிற்குப் பின் தனது தாத்தாவின் வேண்டுதலை தொடர்ந்து 13 வது முறையாக அய்யர்மலை 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து தனது நேர்த்திக்கடனை இளைஞர் நிறைவேற்றினார்.

செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்

First published:

Tags: Hindu Temple, Karur, Kulithalai Constituency