ஹோம் /நியூஸ் /கரூர் /

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா...! கரூரில் பேரூராட்சி கூட்ட தீர்மானத்தை செல்போனில் கணவரிடம் ஒப்புவித்த பெண் தலைவர்

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா...! கரூரில் பேரூராட்சி கூட்ட தீர்மானத்தை செல்போனில் கணவரிடம் ஒப்புவித்த பெண் தலைவர்

பேரூராட்சி கூட்ட தீர்மானத்தை செல்போனில் கணவரிடம் ஒப்புவித்த பெண் தலைவர்

பேரூராட்சி கூட்ட தீர்மானத்தை செல்போனில் கணவரிடம் ஒப்புவித்த பெண் தலைவர்

Karur District | பொதுமக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி செயலாளர்,  பணியாளர்களை பணியிட மாற்றம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Karur, India

  பொதுமக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி செயலாளர்,  பணியாளர்களை பணியிட மாற்றம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை நிறைவேற்ற பேரூராட்சி பெண் தலைவர் தனது கணவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட பிறகு தீர்மானம் காப்பியை பெற்றுக்கொண்டு வாசித்தார். தீர்மானம் நிறைவேற்றப்படாததால் உறுப்பினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி  கூட்டம் தலைவர் சௌந்தர பிரியா தலைமையில்  நடைபெற்றது. இதில் செயல் அலுவலர் குமரவேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 15வது நிதி குழு திட்டம் 2021-22ன் கீழ் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  சமுதாய கழிப்பிடம் மராமத்து பணி மேற்கொள்ளுதல், தொட்டியபட்டியில் உள்ள சமுதாய கழிப்பிடத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தல், பழைய ஜெயங்கொண்டம் சமுதாயக்கூடம் பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட 9  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  இதையும் படிங்க: ''பணி செய்ய விடாமல் சாதிரீதியாக துன்புறுத்துகிறார்கள்'' - பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவி பரபரப்பு புகார்..!

  கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் தேவி நாகராஜன், பேரூராட்சிக்குட்பட்ட  பகுதி பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைபாடுகளை செயல் அலுவலரிடம் கூறினால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. குறிப்பாக பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

  எனவே அலட்சியத்துடன் செயல்படும் செயல் அலுவலர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நமது பேரூராட்சியில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களை பணியிட மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டுவர வேண்டும் என மனு கொடுத்தார்.

  அப்போது மனுவை பெற்றுக்கொண்ட தலைவர் “இந்த தீர்மானம் வாசிக்கலாமா” என செயல் அலுவலரிடம் கேட்டார். அதற்கு அவர் “உங்களது விருப்பம்” என கூறினார். மேலும் “எதுவாக இருந்தாலும் எனது கணவரிடம் கேட்டுக் கொண்டு அனுமதி  பெற்றுக் கொண்டு மனுவை வாசிக்கிறேன்” என  கூட்டத்தில் இருந்து கொண்டு தனது கணவர் மோகன்ராஜிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். பிறகு அந்த சிறப்பு தீர்மானத்தை வாசித்து காண்பித்தார்.

  இதையும் படிங்க: கல்குவாரியை எதிர்த்ததால் கொல்லப்பட்ட விவசாயி: உரிய இழப்பீடு தர சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் வலியுறுத்தல்

  இதனைத்தொடர்ந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றாமல்  அடுத்த கூட்ட தொடரில் பார்த்து கொள்ளலாம் என கூறினார். இதனால் கூட்டத்திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தேவி நாகராஜன்  வெளிநடப்பு செய்தார். பேரூராட்சி செயலர் மற்றும் பேரூராட்சி பணியாளர்களை பணியிட மாற்றம் செய்யக்கோரி மனுவில் கொடுத்த தகவல்கள் முழுவதையும் பிளக்ஸ் பேனராக  பேரூராட்சி முன்பு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  மேலும் பேரூராட்சி செயலர் குமரவேலன் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத்தினரை “நீங்கள் எடுக்க கூடாது“ என கூறி வெளியே போக சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

   செய்தியாளர்: கார்த்திகேயன்

  Published by:Karthi K
  First published:

  Tags: Karur, Local News