Home /News /karur /

''பணி செய்ய விடாமல் சாதிரீதியாக துன்புறுத்துகிறார்கள்'' - பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவி பரபரப்பு புகார்..!

''பணி செய்ய விடாமல் சாதிரீதியாக துன்புறுத்துகிறார்கள்'' - பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவி பரபரப்பு புகார்..!

நன்னியூர் ஊராட்சி

நன்னியூர் ஊராட்சி

ஊராட்சி மன்ற தலைவி சுதா அளித்த புகாரை பெற்றுக்கொண்ட வாங்கல் காவல்துறையினர் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karur, India
    கரூரில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவிக்கு  சாதி ரீதியான பாகுபாடு காட்டுவதுடன், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுகவைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என சம நிலையில் உள்ளனர். ஊராட்சி தலைவராக உள்ள சுதா ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்.
    இந்த நிலையில் வாங்கல் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள தனது கடமையை செய்யவிடாமல் குறுக்கீடு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியும், சாதி ரீதியாக பாகுபாடு செய்து வரும் 9-வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி (அதிமுக) மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அடிக்கடி வந்து அலுவலகப் பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி (திமுக) மற்றும் அலுவலகப் பணியில் ஒத்துழைப்பு கொடுக்காத ஊராட்சி செயலர் நளினி மற்றும் அவருடைய கணவர் மூர்த்தி என்பவர் தேவையில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வந்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறிக்கொண்டு ஊதியம் கேட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: திமுகவில் படித்தவர்கள் யாரும் இல்லை - ஜே.பி.நட்டா கருத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர்

    இந்த புகார் மனுவை ஏற்று நேற்று நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் லீலாகுமார்  மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவி சுதாவை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வாங்கல் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் முன்னிலையில் விசாரணை நடத்தினார். புகார் மனு மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் உண்மை தன்மை மற்றும் புகார் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    செய்தியாளர் : கார்த்திகேயன்
    Published by:Arunkumar A
    First published:

    Tags: Caste, Karur, Scheduled caste

    அடுத்த செய்தி