ஹோம் /நியூஸ் /கரூர் /

இலங்கை அகதிகள் முகாமில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... கிராம நிர்வாக அலுவலர் கைது..!

இலங்கை அகதிகள் முகாமில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... கிராம நிர்வாக அலுவலர் கைது..!

வி.ஏ.ஓ. கைது

வி.ஏ.ஓ. கைது

பெண் கத்தி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் விரைந்து ஓடி வந்தனர். இதனை கண்டு அச்சமடைந்த அன்புராஜ் அங்கு இருந்து தப்பியோடியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur | Karur | Tamil Nadu

  கரூர் குளித்தலை அருகே இலங்கை அகதிகள் முகாமில் உள்ள திருமணமான பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலரை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அன்புராஜ் (36). இவர் கடந்த செப்டம்பர் 29ம் தேதி மதியம் இரும்பூதிப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறு நுழைந்து தூங்கி கொண்டிருந்த திருமணமான 35 வயது பெண்ணிடம் பாலியல் ரீதியான தொல்லை அளித்துள்ளார்.

  அப்போது அந்தப் பெண் கத்தி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் விரைந்து ஓடி வந்தனர். இதனை கண்டு அச்சமடைந்த அன்புராஜ் அங்கு இருந்து தப்பியோடியுள்ளார்.

  ALSO READ | பைக்கில் இருந்து வெளிவந்த பாம்பு.. அச்சத்தில் பைக்கை கீழே போட்டு விட்டு அலறி ஓடிய பெண்..!

  இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் குளித்தலை மகளிர் போலீசார் அன்புராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை குளித்தலை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: கார்த்திகேயன் - கரூர்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Karur, Sexual abuse, Sexual harrasment