ஹோம் /நியூஸ் /கரூர் /

கரூர் அருகே பைக் மீது லாரி மோதி கோர விபத்து - மாமியார், மருமகன் பரிதாப பலி

கரூர் அருகே பைக் மீது லாரி மோதி கோர விபத்து - மாமியார், மருமகன் பரிதாப பலி

Karur Accident | கரூர் அருகே  கிரானைட் கல் ஏற்றி சென்ற லாரி மோதி கோர விபத்தில் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வந்த மருமகன், மாமியார் உடல் நசுங்கி பலியாகினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur, India

  கரூர் அருகே  கிரானைட் கல் ஏற்றி சென்ற லாரி மோதி ஏற்பட்ட கோர விபத்தில் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வந்த மருமகன், மாமியார் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

  கரூர் மாவட்டம் கடவூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(34). வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, மூன்று வயதில் பெண் குழந்தை, ஏழு மாத பெண் குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

  இந்நிலையில், நேற்று பாலவிடுதியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக கனகராஜ்  மற்றும் அவரது மாமியார் சுசிலா (55) ஆகியோர் இருசக்கர வாகனத்தில்  சென்றனர். பின்னர் மீண்டும் இரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். அப்போது வெள்ளியணை அருகே வந்தபோது கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி இவர்களது இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் லாரியின் சக்கரத்தில் இருவரும் மாட்டிக்கொண்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தி ஓட்டி தப்பி ஓட்டம் பிடித்தார்.

  இதையும் படிங்க : அரசு மருத்துவமனையை காணவில்லை... கரூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

  உயிரிழந்த கனகராஜ் மற்றும் சுசிலா ஆகியோரின் உடல் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த மருமகன், மாமியார் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கரூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன்

  Published by:Karthi K
  First published:

  Tags: Accident, Karur