ஹோம் /நியூஸ் /கரூர் /

கரூரில் இளைஞர்களை உருட்டு கட்டையால் தாக்கிய திருநங்கைகள்... போலீஸ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அராஜகம்!

கரூரில் இளைஞர்களை உருட்டு கட்டையால் தாக்கிய திருநங்கைகள்... போலீஸ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அராஜகம்!

கரூரில் திருநங்கைகள் அராஜகம்

கரூரில் திருநங்கைகள் அராஜகம்

Karur News : திருநங்கைகள் 10 பேரை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur, India

  கரூரில் இளைஞர்களை உருட்டு கட்டைகளை கொண்டு தாக்கிய திருநங்கைகள் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் யாசகம் என்ற பெயரில் இளைஞர்களிடம் அராஜகத்தில் ஈடுபட்டு உருட்டு கட்டையுடன் தாக்குதல் நடத்திய திருநங்கைகள் செயல் பரபரப்பு ஏற்படுத்தியது.

  இந்நிலையில், பொதுமக்கள் புகார் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ ஆதாரங்களை கொண்டு திருநங்கைகள் 10 பேரை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

  இதையும் படிங்க : 60 வயது மூதாட்டியை சோளக்காட்டில் வைத்து பலாத்கார முயற்சி : அலறல் சத்தத்தால் சிக்கிய 22 வயது வாலிபர்!

  அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து திருநங்கைகள் போலீசாரை சூழ்ந்து கொண்டு கைகளை தட்டி, அநாகரீகமான செயலுடன் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

  இதன் காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் அதிவிரைவு படை போலீசார் வரவழைக்கப்பட்டு, காவல் நிலைய நுழைவு வாயில் கதவுகள் சாத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

  செய்தியாளர் : தி.கார்த்திகேயன் - கரூர்

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Karur