ஹோம் /நியூஸ் /கரூர் /

கரூர் அருகே விவசாய நிலத்தில் 1000 ஆண்டு பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு...

கரூர் அருகே விவசாய நிலத்தில் 1000 ஆண்டு பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு...

விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்

விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்

Karur | ஆழமாக தோண்டி பார்த்தபோது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏழு அடி உயரம் உள்ள சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur, India

  கரூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏழு அடி உயரம் உள்ள சிவலிங்கம் சிலை விவசாய நிலத்தில் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த அரசம்பாளையம் கிராமத்தில் தனி நபருக்கு சொந்தமான  முருங்கை தோட்ட விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில், விவசாய பணி நடைபெற்றது. அப்போது பெரிய பாறை போன்ற கல் தென்பட்டது. அதனை ஆழமாக தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் என்பது தெரியவந்து. இது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. சிவலிங்கத்தை கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரிப்பட்டனர்.

  இந்நிலையில், இந்த தகவல் காட்டுத்தீப்போல அந்த பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து, அந்த இடத்திற்கு சிவனடியார்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்தனர். பின்னர்  பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 7 அடி உயரம் உள்ள சிவலிங்கத்தை தோண்டி எடுத்தனர்.

  இதையும் படிங்க : தேவர் ஜெயந்தி : பசும்பொன் செல்வதை தவிர்த்த ஈபிஎஸ்... நந்தனத்தில் மரியாதை செலுத்துகிறார்

  இதனைத்தொடர்ந்து அந்த சிவலிங்கத்திற்கு  சிறப்பு பூஜையான பால், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியின்போது சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிவலிங்கத்தை வணங்கி செல்கின்றனர்.

  செய்தியாளர் : கார்த்திகேயன்- கரூர்

  Published by:Karthi K
  First published:

  Tags: Karur