ஹோம் /நியூஸ் /கரூர் /

விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் - உடலை வாங்க உறவினர் மறுப்பு!

விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் - உடலை வாங்க உறவினர் மறுப்பு!

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

Karur News : மோகன்ராஜை காப்பாற்ற உடன் வேலைபார்த்த தோரணக்கல்பட்டி பகுதியை சேர்ந்த சிவா மற்றும் சிவக்குமார் என இருவரும் உள்ளே இறங்கியுள்ளனர். அவர்களையும் விஷவாயு தாக்கியது. இதனால்  மூன்று பேரும் மயக்கம் அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karur, India

    கரூர் அருகே சுக்காலியூர் காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இரண்டு மாதங்களாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிய வீட்டிற்கு கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று மாலை கழிவுநீர் தொட்டியில்  கான்கிரீட் மர பொருட்களை அகற்றுவதற்காக  தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மோகன்ராஜ்  இறங்கி உள்ளார். அப்போது விஷவாயு தாக்கி உள்ளே மயக்கமடைந்துள்ளார். 

    மோகன்ராஜை காப்பாற்ற உடன் வேலைபார்த்த தோரணக்கல்பட்டி பகுதியை சேர்ந்த சிவா மற்றும் சிவக்குமார் என இருவரும் உள்ளே இறங்கியுள்ளனர். அவர்களையும் விஷவாயு தாக்கியது. இதனால்  மூன்று பேரும் மயக்கம் அடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க : குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் மரணம் - மயக்க மருந்து காரணமா? - உறவினர்கள் போராட்டம்

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் தீயணைப்பு துறையினர்  மயக்க மடைந்த நிலையிலிருந்த மூன்று பேரையும் மீட்டு கரூர் அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என தெரிவித்தனர்.

    விஷவாயு தாக்கி மூன்று பேர் இறந்த சம்பவம் குறித்து தான்தோன்றி மலை போலீசார் விசாரணையில் வீட்டின் உரிமையாளர் குணசேகரன், கட்டிட மேஸ்திரி கார்த்திக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், கரூர்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவரை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க கோரி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க : தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு - திருமாவளவன் பேச்சு!

    போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம், கரூர் தாசில்தார் மற்றும் கரூர் நக காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளர் : கார்த்திகேயன் - கரூர்

    Published by:Karthi K
    First published:

    Tags: Crime News, Karur