ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் வடிவுக்கரசி(35). இவருக்கு விஜய் என்ற நபருடன் திருமணம் ஆகி 10 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக கார் ஷோரூம் ஒன்றில் புதிய கார் வாங்குவதற்காக தந்தை குப்புசாமி, மகள் வடிவுக்கரசி இருவரும் சென்றுள்ளனர்.
அங்கு சசி என்ற நபர் கார் மாடல்கள் தற்போது குறைவாக உள்ளதாகவும், புதிய மாடல்கள் குறித்து தகவல் தெரிவிப்பதாக வடிவுக்கரசியின் முழு விபரங்களுடன் தொலைபேசி நம்பரை பெற்று ள்ளார்.
இதில் அவருக்கும். வடிவுக்கரசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் வீட்டை விட்டு வெளியேறி சசியுடன் வடிவுக்கரசி சென்றுள்ளார்.
இதையும் படிங்க : மது போதை.. அப்பளமாக நொறுங்கிய கார்.. சோகத்தில் முடிந்த லாங் ட்ரைவ் ..!
இந்நிலையில், வடிவுக்கரசி குடும்பத்தினரிடமிருந்து ரூ.30 லட்சம் வரை பணம் பெற்று சசியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சசி மற்றும் வடிவுக்கரசி கரூரில் ஷவர்மா உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
வடிவுக்கரசியின் அப்பா குப்புசாமி மற்றும் உறவினர்கள் அந்த கடைக்கு இன்று நேரில் சென்று தங்களது குடும்பத்தை சீரழித்து விட்டதாக கேள்வி எழுப்ப, சசி தகாத வார்த்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து வாக்குவாதம் முற்றி, சசியை உறவினர்கள் ஒன்று கூடி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மடவளாகம் பகுதியில் அடித்து தரதரவென சாலையில் இழுத்து வந்துள்ளனர்.
இதில் சசிக்கு மண்டை உடைப்பு ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கரூர் மாநகர காவல் துறையினர் விரைந்து வந்து சசியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து குப்புசாமி மற்றும் அவரது உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : கார்த்திகேயன் - கரூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Karur, Local News