முகப்பு /செய்தி /கரூர் / கரூரில் சிக்கிய 44 கிலோ கஞ்சா.. ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்த 6பேர் கைது

கரூரில் சிக்கிய 44 கிலோ கஞ்சா.. ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்த 6பேர் கைது

கஞ்சா

கஞ்சா

ஈச்சர் வாகனத்திற்குள் அமர்ந்து சிறு, சிறு பொட்டலங்களாக போட்டுக் கொண்டிருந்தபோது காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

கரூரில் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, விற்பனை செய்த, நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரி கந்தன் உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கரூர் அடுத்த மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்கின்ற கந்தசாமி மற்றும் அவரது நண்பர்கள் ரூபன்ராஜ், சென்றாயன், கவாஸ்வர் ஜீவானந்தம், மற்றும் கஸ்தூரி என்ற பெண் உட்பட 6 நபர்கள் ஈச்சர் வாகனத்தின் மூலம் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, கரூரில் விற்பனை செய்து வந்தனர்.

இன்று கரூர் மாநகர பகுதிக்குட்பட்ட பெரிய ஆண்டாங்கோவில் ரோடு, பெரியார் வளைவு மேம்பாலம் அருகே 44 கிலோ எடை கொண்ட கஞ்சாவை விற்பனைக்காக ஈச்சர் வாகனத்திற்குள் அமர்ந்து சிறு, சிறு பொட்டலங்களாக போட்டுக் கொண்டிருந்தபோது, சைபர் கிரைம் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் குழுவினர் மற்றும் நகர காவல் போலீசார் உடன் நேரில் சென்று கஞ்சா பொட்டலங்கள் போட்டுக் கொண்டிருந்த 6 நபர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகள்

மேலும், அவர்களிடமிருந்து 44 கிலோ கஞ்சா, ஒரு ஈச்சர் வாகனம் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூரில் 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : தி.கார்த்திகேயன்

First published:

Tags: Ganja, Karur