Home /News /karur /

கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தமிழாசிரியர் மற்றும் பள்ளி தாளாளர் போக்சோவில் கைது...

கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தமிழாசிரியர் மற்றும் பள்ளி தாளாளர் போக்சோவில் கைது...

பள்ளி தாளாளர் யுவராஜ்

பள்ளி தாளாளர் யுவராஜ்

sexual harassment Pocso arrest | கரூரில் தனியார் பள்ளியில் 10 வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தமிழாசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பள்ளியின் தாளாளரும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும் ...
    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில் தனியார் மெட்ரிக் ( காவிரி) பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவருக்கு கடந்த 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் தமிழ் ஆசிரியர் நிலஒளி. அந்த பெண்ணிடம் உனக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு ஹால் டிக்கெட் கொடுக்க மாட்டேன். உன்னை தேர்ச்சி பெறாமல் செய்து விடுவேன் எனக் கூறி மிரட்டி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    அத்துடன் போனில் வீடியோ எடுத்து அனுப்ப சொல்லியும், நேரில் வீடியோ காண்பிக்க சொல்லியும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தற்போது அந்த மாணவி பத்தாம் வகுப்பு முடித்து விட்ட பிறகும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு அடி பணிந்து மொபைல் போனுடனேயே இருந்துள்ளார்.

    இதனை பார்த்து சந்தேகமடைந்த பெற்றோர் போனை ஆய்வு செய்ததில் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி நேரில் சென்ற பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    லாலாபேட்டை போலீசார் அவரை  போக்சோ வழக்கில் கைது செய்தனர். அதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்த நிலையில் உறவினர்கள் பெற்றோர்கள் மீண்டும் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் வெளியில் தெரியும் நிலையில் அந்த மாணவி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    அதனை தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி,   அந்த மாணவியிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் ஆக அந்த பள்ளியின் தாளாளர் ஒருவரும் அந்தப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரியவந்தது.

    அந்த தமிழாசிரியர் உடன் சேர்ந்து கொண்டு அதே மாணவிக்கு மொபைல் மூலமாக பாலியல் தொல்லையும், நேரிலும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால்தான் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன் என வாக்குமூலம் கொடுத்ததின் பேரில், வழக்கு பதிவு செய்த குளித்தலை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் பள்ளி தாளாளர் யுவராஜை கைது செய்து அழைத்து சென்றனர்.

    மாயனூர் காவல் நிலையத்தில் வைத்து குளித்தலை சரக காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அந்த பள்ளியில் இதேபோல் மற்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாரா?  அல்லது தமிழாசிரியர் சாமியார் வேடம் போட்டு மாணவிகளை மயக்கி அவரும் மற்றும் பள்ளி தாளாளரும் சேர்ந்து பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினாரா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழாசிரியரின் இரண்டு செல்போன்களில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள், 100க்கும் மேற்பட்ட பெண்கள் என 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்களில் பல புகைப்படங்கள் ஆபாசங்களான புகைப்படங்களும் இருந்து  குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Karur, Sexual harassment

    அடுத்த செய்தி