ஹோம் /நியூஸ் /கரூர் /

ஸ்கூட்டியை ஓட்டி வந்தபோது முன்னாடி எட்டிப் பார்த்த பாம்பு.. அலறியடித்து ஓடிய பெண்...!

ஸ்கூட்டியை ஓட்டி வந்தபோது முன்னாடி எட்டிப் பார்த்த பாம்பு.. அலறியடித்து ஓடிய பெண்...!

ஸ்கூட்டியில் பதுங்கியிருந்த பாம்பு

ஸ்கூட்டியில் பதுங்கியிருந்த பாம்பு

பைக்கின் அடியில் சிக்கி கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள சாரை பாம்பை, சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur | Karur | Tamil Nadu

  கரூரில் பெண் ஒருவர் தன் குழந்தை மற்றும் தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, தனது வாகனத்தில் இருந்து வெளிவந்த பாம்பை கண்டு அச்சமடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்.

  கரூர் மாவட்டம், பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்பவர் தனது குழந்தையையும் அவரது தாயையும் இருசக்கர வாகனத்தில் அமர வைத்த படி கரூர் சென்றுள்ளார். கரூர் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் இருந்து திடீரென பாம்பு வெளியேறியுள்ளது. இதனை கண்டு அச்சமடைந்த அந்த பெண் வாகனத்தை நிறுத்திவிட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.

  தகவல் அறிந்து வந்த கரூர் தீயணைப்பு துறையினர் அந்த இருசக்கர வாகனத்தின் பாகத்தை ஒவ்வொன்றாக பிரித்து எடுத்து,  பைக்கின் அடியில் சிக்கி கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள சாரை பாம்பை, சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

  இதையும் படிங்க | கரூர் அருகே பைக் மீது லாரி மோதி கோர விபத்து - மாமியார், மருமகன் பரிதாப பலி

  இதனை கண்ட அப்பகுதி மக்கள், சுற்றி நின்றபடி வேடிக்கை பார்த்தனர். பைக்கின் பாகங்கள் பிரிக்கப்பட்டதால், அந்த பெண், பைக் பழுது பார்ப்பவரை வரவழைத்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றார்.

  செய்தியாளர்: கார்த்திகேயன் (கரூர்)

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Karur, Snake