Home /News /karur /

படித்த முட்டாள்.. தீர்ப்பை சரியாக படித்து பார்க்கவும்... அண்ணாமலையை கடிந்த செந்தில் பாலாஜி

படித்த முட்டாள்.. தீர்ப்பை சரியாக படித்து பார்க்கவும்... அண்ணாமலையை கடிந்த செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி, அண்ணாமலை

செந்தில் பாலாஜி, அண்ணாமலை

அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடியாக பதவி விலகவில்லை என்றால், கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகின்ற திங்கள் கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karur, India
அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக கரூர் மாவட்ட தலைவர் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தீர்ப்பை சரியாக படித்துவிட்டு விமர்சிக்க வேண்டும் என கூறியிள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் புகார் அளித்தவர்களுக்கு பணத்தை திருப்பி தருவதாக கூறி சமரசம் ஏற்பட்டதாக மேற்படி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மேற்படி வழக்கில் போதிய முகாந்திரம் இருக்கிறது. எனவே மீண்டும் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து இருக்கிறது.

இதையும் வாசிக்க: பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் திமுகவிற்கு கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி

இந்த வழக்கு தொடர்பாக கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உச்ச நீதிமன்றமே இந்த வழக்கில் முகாந்திரம் இருக்கிறது என்று கூறியுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளது, எனவே தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்து வரும் செந்தில்பாலாஜி தார்மீக பொறுப்பு ஏற்று இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரையில், உடனடியாக பதவி விலக வேண்டும்” என கூறினார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடியாக பதவி விலகவில்லை என்றால், கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகின்ற திங்கள் கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள சரத்துகளை தெளிவாக படித்துப் பார்க்க வேண்டும். படித்து பார்க்க தெரியவில்லை என்றால் படித்த வழக்கறிஞர் ஒருவரிடம் அது பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டிக் கொள்வார். அவரைப் போலவே அவரது கட்சியின் மாவட்ட தலைவரும் செயல்படுகிறார்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

- கார்த்திகேயன், செய்தியாளர்
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: ADMK Govt, Annamalai, BJP, Senthil Balaji, Supreme court

அடுத்த செய்தி