ஹோம் /நியூஸ் /கரூர் /

படிக்கட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்.. கூடுதல் பேருந்து வசதி கேட்கும் கரூர் மக்கள்

படிக்கட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்.. கூடுதல் பேருந்து வசதி கேட்கும் கரூர் மக்கள்

பேருந்தில் தொங்கியபடி டெல்லும் மாணவர்கள்

பேருந்தில் தொங்கியபடி டெல்லும் மாணவர்கள்

karur | கரூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தை உணராமல் படியில் பயணித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur, India

  கரூர் மாவட்டம் வெள்ளியணையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் அம்மன் நகர், மணவாடி, பச்சைப்பட்டி, ஜல்லிப்பட்டி, வெங்ககல்பட்டி என பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து  படிப்பதற்காக மாணவ, மாணவிகள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.

  இந்த நிலையில்  பள்ளி முடித்துவிட்டு மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் கரூர் நோக்கி வந்த அரசு நகர் பேருந்து, வெள்ளியணை பேருந்து நிருத்ததிற்கு வந்த போது மாணவர்கள் முண்டியடித்து ஏறினார்கள்.

  மாணவர்கள் பேருந்திற்கு உள்ளே செல்ல  இயலாததால் மாணவர்கள் படியில் தொங்கி செல்லும் நிலை ஏற்பட்டது.

  அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்து இயக்கிய தொடங்கியதும் மாணவர்கள் ஓடி சென்று படியில் தொங்கியவாறு சென்றனர்.

  Also see... நடிகையின் செல்போன் எண்ணைக்கேட்டு கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சம்மன்...

  ஆபத்தை உணராமல் பேருந்தில் பயணிக்கும் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன்,கரூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Bus, Karur, School students