Home /News /karur /

பொடுகு தொல்லையால் பெற்றோர் முடிவெட்டி விட்டதால் பள்ளி மாணவி தற்கொலை.. கரூரில் சோகம்

பொடுகு தொல்லையால் பெற்றோர் முடிவெட்டி விட்டதால் பள்ளி மாணவி தற்கொலை.. கரூரில் சோகம்

மாதிரி படம்

மாதிரி படம்

Karur | தலையில் பொடுகு தொல்லை காரணமாக பெற்றோர் முடி வெட்டிவிட்டனர். இதனால் 12ம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India
    கரூரில், தலையில் பொடுகு இருப்பதாகக்கூறி பெற்றோர் முடி வெட்டி விட்டதால், மன வேதனை அடைந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    வெண்ணமலை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனா என்ற அந்த மாணவி பொடுகு தொல்லையால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அந்த மாணவியின் பெற்றோர் அவருக்கு பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்று பாப் கட்டிங் செய்துள்ளனர்.

    Also see... சடலத்துடன் குரூப் போட்டோ ஷூட் நடத்திய குடும்பம்

    தலை முடியை பாப் கட்டிங் செய்த நிலையில் அந்த மாணவி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் பெற்றோர் உறங்கும்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Commit suicide, Crime News, Karur

    அடுத்த செய்தி