முகப்பு /செய்தி /Karur / ரூ.50,000 லஞ்சம்: மகளுக்கு நீட் பயிற்சி கட்டணம்- டி.எஸ்.பி லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக எஸ்.பியிடம் உணவக உரிமையாளர் புகார்

ரூ.50,000 லஞ்சம்: மகளுக்கு நீட் பயிற்சி கட்டணம்- டி.எஸ்.பி லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக எஸ்.பியிடம் உணவக உரிமையாளர் புகார்

லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக புகார்

லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக புகார்

Karur : கரூர் மாவட்ட ஆயுதப்படை பயிற்சி பள்ளி துணை முதல்வர் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக உணவக ஒப்பந்ததாரர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

  • Last Updated :

கரூர் மாவட்ட ஆயுதப்படை பயிற்சி பள்ளி துணை முதல்வர் (டி.எஸ்.பி) லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக உணவக ஒப்பந்ததாரர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் தாந்தோணிமலை ஆயுதப்படை வளாகத்தில் தற்காலிக காவலர் பயிற்சி உணவகம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொன். முத்துக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். அவர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

அந்த புகார் மனுவில், கரூர் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி துணை முதல்வராக டி.எஸ்.பி தேவராஜன் செயல்பட்டு வருகிறார். நான் நடத்தி வரும் உணவக வருமானத்தில் அவரது குடும்ப செலவிற்கும், என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு என்னை வற்புறுத்தி வருகிறார்.

இதற்கு ஆதாரமாக, தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் டி.எஸ்.பி தேவராஜனின் மகளுக்கு NEET பயிற்சி கட்டணம் ரூ.10,000/- செலுத்திய ரசீது என்னிடம் உள்ளது. அதன் பின்னிட்டு, பயிற்சி கட்டணம் செலுத்திய அடுத்த வாரம் நான் நடத்தி வரும் உணவகத்திற்கு வந்து ரூ.50,000/-ஐ என்னிடமிருந்து பெற்று சென்றார்.

மேலும், தொடர்ந்து தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் தேவராஜன், உணவகத்திலிருந்து எனக்கு வரும் வருமானத்தில் என்னிடம் கமிஷன் தொகை கேட்டும், லேப்டாப் கேட்டும் என்னை மிரட்டி தொந்தரவு செய்தும் மற்றும் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மது வாங்கி கொடுத்து ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தேவையற்ற பிரச்சனைகளைத் தூண்டி விடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் டி.எஸ்.பி தேவராஜன் கேட்கும் பணத்தையும், லேப்டாப்பையும் வாங்கிக் கொடுக்க இயலாததால், நான் நடத்தி வரும் உணவகத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.

Must Read : கன்னியாகுமரி இரட்டைக்கொலை... காட்டிக்கொடுத்த மங்கி குல்லா - கொள்ளையடித்த நகைகளை காதலிக்கு பரிசளித்ததாக கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

எனவே தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர்  தேவராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து தொடர்ந்து உணவகம் நடத்த எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு  வேண்டுகிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

top videos

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்.

    First published:

    Tags: Karur, Police complaint