Home /News /karur /

அரசு பள்ளி, கோவில் நிலங்களை உறவினர்களுக்கு பட்டா மாற்றம் செய்த விஏஓ... ஆட்சியரிடம் புகார் அளித்த கிராம மக்கள்...

அரசு பள்ளி, கோவில் நிலங்களை உறவினர்களுக்கு பட்டா மாற்றம் செய்த விஏஓ... ஆட்சியரிடம் புகார் அளித்த கிராம மக்கள்...

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய கிராம மக்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய கிராம மக்கள்

Karur | கடவூர் அருகே கிழக்கு ராசாப்பட்டியில் அரசு பள்ளி, கோவில், ஊர் மக்களின் நிலங்களை முன்னாள் விஏஓ தனது உறவினர்களுக்கு பட்டா மாற்றம் செய்துள்ளதாக கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India
    கரூர் மாவட்டம் கிழக்கு ராசாப்பட்டியில் பழனிச்சாமி என்பவர் விஏஓ-வாக பணியாற்றியுள்ளார். பணியாற்றிய காலத்தில் கிராம மக்கள் சிலரின் நிலங்களையும், கோவில் போன்ற அரசு நத்தம் நிலங்களையும் தனது பெயருக்கும், தனது உறவினர்களின் பெயரிலும் பட்டா மாற்றம் செய்து மோசடி செய்துள்ளார். 

    இந்த மோசடியை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியுற்றனர். முன்னாள் விஏஓ பழனிச்சாமியின் சொத்துகளை முடக்கவும்,  மோசடி பட்டா மாற்றத்தை கண்டறிந்து அவற்றை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்றக்கோரியும் கிழக்கு ராசாப்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில், “ சுமார் 150-க்கு மேற்பட்ட வீடு மற்றும் காலி நிலத்தை பட்டா மாற்றியும், அந்த நிலத்தை வில்லங்கபடுத்தியும், உறவினர் பெயரினால் தன்வசம் படுத்தி உள்ளார். அதனால் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கவும், அரசு நிலம் மற்றும் எங்களது வீடு, நிலத்தை மீட்டு தர வலியுறுத்தியும்” அந்த புகார் மனுவில் கூறியிருந்தனர்.

    எங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கதறும் கிராம மக்கள்


    Also see... சாப்பிட்டு பணம் தராமல் தகராறு: இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

    மேலும் அக்கிராம பொதுமக்கள் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன்,கரூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Karur

    அடுத்த செய்தி