Home /News /karur /

வாய்க்காலுக்குள் பெண்ணை இழுத்துச்சென்று தவறாக நடக்க முயன்ற இளைஞர்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

வாய்க்காலுக்குள் பெண்ணை இழுத்துச்சென்று தவறாக நடக்க முயன்ற இளைஞர்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த நபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்... 

பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த நபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்... 

குளித்தலை சுங்ககேட்டில் வாய்க்காலில் பாத்திரம் கழுவிய பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த நபரை பிடித்து பொதுமக்கள் அடித்து தாக்கினர். அதனை தடுக்க முயன்ற போலீசாரும் தாக்கப்பட்டதால் அந்த பகுதி பெரும் பரப்பரப்பாக காணப்பட்டது.

    கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் வேளாளர் தெருவை சேர்ந்தவர் கணேசன் மனைவி துர்கா  32. இவர்  நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள தென்கரை வாய்க்காலில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது வாய்க்காலில் மூழ்கியவாறு வந்த மர்மநபர் திடீரென அந்தப் பெண்ணின் வாயை பொத்தி வாய்க்காலினுள் இழுத்து சென்று தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதை கண்ட அருகில் இருந்த இளைஞர்கள்  வாய்க்காலில் குதித்து பெண்ணை  மீட்டதுடன் மர்ம நபரை பிடித்து கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

    அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்  நாவுக்கரசு குற்றவாளியை தனது வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க முற்பட்டுள்ளனர்.
    அப்போது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற மர்ம நபரை கோபமுற்ற பொதுமக்கள், இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.
    இதனை தடுக்க முயன்ற போலீசார் மற்றும் போலீஸ் வாகனமும் தாக்கப்பட்டது.

    போலீசார் மர்ம நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் அவர் நாமக்கல் அருகே கீழப்பாளையத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சிவக்குமார் என்பது தெரிய வந்தது.
    இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Also see... டிஜிட்டல் தடுப்பூசியும் அதன் பயன்பாடுகளும்!

    குற்றவாளியை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்ற போது பொதுமக்கள், இளைஞர்கள் குற்றவாளியை தாக்க முயன்றபோது போலீசார் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Karur, Police

    அடுத்த செய்தி