ஹோம் /நியூஸ் /கரூர் /

குற்றங்களை தடுக்க நடவடிக்கையை வேகப்படுத்துங்கள் : தமிழக காவல்துறைக்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ்!

குற்றங்களை தடுக்க நடவடிக்கையை வேகப்படுத்துங்கள் : தமிழக காவல்துறைக்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ்!

அண்ணாமலை

அண்ணாமலை

Karur | தமிழகம் அமைதி பூங்காவாக மாற காவல் துறை தனது முழு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை தன்னுடைய வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அடுத்த குற்றம் தடுக்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India

திருப்பூர் ஜெய்நகர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேக பயிற்சி ஆசிரியர் பிரபு வீட்டில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் 4 பேர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் கார் கண்ணாடி உடைந்து சேதமானது. 

இந்நிலையில் திருப்பூர் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  பிரபு வீட்டில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,"  தமிழகம் அமைதி பூங்காவாக மாற காவல் துறை தனது முழு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக காவல்துறை தன்னுடைய நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும். காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அடுத்த குற்றம் தடுக்கப்படும். யார் தவறு செய்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Also see... உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது..!

மேலும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுமா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, சிரித்துக் கொண்டே 'அதில் என்ன சந்தேகம்' என்றார்..

Published by:Vaijayanthi S
First published:

Tags: Annamalai, BJP, Karur, Police