Home /News /karur /

செப்டிக் டேங்க் கழிவுகளை கிணற்றில் கொட்டி சுகாதார சீர்கேடு - லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்

செப்டிக் டேங்க் கழிவுகளை கிணற்றில் கொட்டி சுகாதார சீர்கேடு - லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்

செப்டிக் டேங்க் கழிவுகளை கிணற்றில் கொட்டிய லாரி

செப்டிக் டேங்க் கழிவுகளை கிணற்றில் கொட்டிய லாரி

சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக கழிவுகளை கொட்ட வந்த செப்டிக் டேங்க் லாரியை ஊர் பொதுமக்கள் சிறைபிடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India
    கரூர் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய லாரியை ஊர் பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சிக்கு உட்பட்ட கற்பகா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தனியார் மழலையர் பள்ளி ஒன்றும் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகே தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாத இந்த கிணற்றில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் லாரி ஒன்று கழிவுகளை எடுத்து வந்து சட்ட விரோதமாக இந்த கிணற்றில் கொட்டி வந்துள்ளனர்.
    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை கழிவுகளை கொட்டுவதற்காக வந்தபோது, அந்த டேங்கர் லாரியை சிறை பிடித்தனர்.

    தொடர்ந்து வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், அப்பகுதிக்கு வந்த போலீசார் பொதுமக்களின் புகாரை ஏற்றுக் கொண்டு அந்த டேங்கர் லாரியை பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த டிரைவர் உள்ளிட்ட மூன்று நபர்களை வழக்கு பதிவு செய்வதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    சிறை பிடிக்கப்பட்ட லாரி


    மேலும், கரூரில் இது போன்று 10க்கும் மேற்பட்ட செப்டிக் டேங்க் டேங்கர் லாரி வைத்திருக்கும் நிறுவனங்கள், கழிவுகளை எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலை ஓரங்களிலும், கைவிடப்பட்ட கிணறுகளிலும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக கொட்டி வருவதாக புகார் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் செப்டிக் டேங்க் லாரிகளை கண்காணித்து, கழிவுகளை அப்புறப்படுத்தும் நடைமுறையை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிறைபிடித்த பொதுமக்கள்


    சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக கழிவுகளை கொட்ட வந்த செப்டிக் டேங்க் லாரியை ஊர் பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர் : தி.கார்த்திகேயன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Karur, Tamil News

    அடுத்த செய்தி