ஹோம் /நியூஸ் /கரூர் /

மன அழுத்தத்தை போக்கும் ஓவியப்போட்டி.. கரூர் சிறைவாசிகள் உற்சாகம்..!

மன அழுத்தத்தை போக்கும் ஓவியப்போட்டி.. கரூர் சிறைவாசிகள் உற்சாகம்..!

கரூர் சிறைவாசிகளுக்கு ஓவிய போட்டி

கரூர் சிறைவாசிகளுக்கு ஓவிய போட்டி

கரூர் கிளை சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் ஓவியப்போட்டி நடைபெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur, India

  கரூர் மாவட்ட பொது நூலகத் துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் 55வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு கரூர் கிளை சிறைவாசிகளுக்கு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது.

  கரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கரூர் கிளை சிறையில் உள்ள 44 விசாரணை சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

  இந்த நிகழ்ச்சி மாவட்ட மைய நூலக அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் கரூர் கிளைச்சிறை கண்காணிப்பாளர் அருணாச்சலம் ஓவியப்போட்டிகளை துவக்கி வைத்தார். ஓவிய ஆசிரியர் துரைராஜ் நடுவராக இருந்து சிறைவாசிகள் ஓவியம் வரையும் நுணுக்கங்களை விளக்கமாக எடுத்துரைத்து அவர்களை ஓவியம் வரையச் உற்சாகப்படுத்தினார்.

  Also see... Gold Rate | மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

  இதில் சிறப்பாக ஓவியம் வரைந்த சிறைவாசிகளில் முதல் 3 நபர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  தி.கார்த்திகேயன், செய்தியாளர், கரூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Karur, Painting, Prisoners