Home /News /karur /

சூரிய மின் உற்பத்தி கணக்கீட்டு மீட்டர் வழங்க தாமதம்... மின் வாரிய அதிகாரிகள் ரூ.2.20 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு

சூரிய மின் உற்பத்தி கணக்கீட்டு மீட்டர் வழங்க தாமதம்... மின் வாரிய அதிகாரிகள் ரூ.2.20 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு

நுகர்வோர் குறைதீர் ஆணையம்

நுகர்வோர் குறைதீர் ஆணையம்

Karur : கரூரில் சூரிய மின் உற்பத்தி கணக்கீட்டு மீட்டர் வழங்க தாமதம் ஆனதால், பாதிக்கப்பட்ட நபருக்கு மின் வாரிய அதிகாரிகள் ரூ.2.20 லட்சம் இழப்பீட்டை வட்டியுடன் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    சூரிய மின் உற்பத்தி கணக்கீட்டு மீட்டர் வழங்க தாமதம் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டவருக்கு மின் வாரிய அதிகாரிகள் ரூ.2.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    கரூர் மாவட்டம், க.பரமத்தியைச் சேர்ந்தவர் பாலு. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு வீட்டில் சூரிய மின் உற்பத்தி ஜெனரேட்டர் அமைத்து அதன் மூலம் மின் உற்பத்தி செய்து வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை பயன்படுத்தி வந்தார்.

    இந்நிலையயில் மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தது. எனவே, இந்த திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு பாலு அவரது வீட்டில் ரூ.1.10 லட்சம் செலவில் சூரிய மின் உற்பத்தி ஜெனரேட்டர் (ரூப் டாப் சோலார் ஜெனரேட்டர்) நிறுவி, அதிலிருந்து பெற்ற மின் உற்பத்தியை வீட்டுக்கு பயன்படுத்திக்கொண்டு மீதம் உள்ளதை மின்வாரியத்திற்கு அளித்து வந்தார்.

    அவர் வீட்டில் செய்யப்படும் மின் உற்பத்தி, அவர் பயன்படுத்தும் மின் அளவு, அவர் மின்வாரியத்திற்கு வழங்கும் மின் அளவு ஆகியவற்றை கணக்கீடு செய்யும் நெட் மீட்டர் இணைப்புக்கு கடந்த 2017 பிப்ரவரி 27ஆம் தேதி, ரூ.6,025 செலுத்தி மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் காத்திருந்தார்.

    ஆனால், பாலுவுக்கு பிறகு இணைப்புக்கு பணம் செலுத்தியவர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்ட  நிலையில் 8 மாதங்களுக்கு மேலாகியும், பாலுவுக்கு நெட் மீட்டர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பாலு கடந்த 2017 நவம்பர் 9 தேதியில் வழக்கு தாக்கல் செய்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் ஊரக கோட்ட செயற்பொறியாளர், சின்னதாராபுரம் மற்றும் க.பரமத்தி உதவி பொறியாளர்கள் ஆகியோர் இழப்பீடாக ரூ.5 லட்சம், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.10,000, மின் வாரியத்திற்கு கட்டணமாக செலுத்திய ரூ.10,000 வழங்கவேண்டும் என  புகார் தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் (பொ) ரத்னசாமி ஆகியோர் மின் வாரியத்தின் சேவைக் குறைப்பாட்டினால் பாலுவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10,000, மின் வாரியத்திற்கு கூடுதலாக செலுத்திய மின் கட்டணம் ரூ.10,000, இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டனர்.

    Must Read :  அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    மேலும், அந்த தொகையை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், வழக்கு தாக்கல் செய்த தேதியில் இருந்து வழங்கவும், அந்த தொகையை உத்தரவு வந்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டனர்.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Karur, TNEB

    அடுத்த செய்தி