முகப்பு /செய்தி /Karur / 2 தலைமுறைகளாக கோவில் நிலத்தில் விவசாயம் செய்பவர்களை காலி செய்ய சொல்வதா? - கொந்தளிக்கும் கரூர் விவசாயிகள்

2 தலைமுறைகளாக கோவில் நிலத்தில் விவசாயம் செய்பவர்களை காலி செய்ய சொல்வதா? - கொந்தளிக்கும் கரூர் விவசாயிகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் அய்யாக்கண்ணு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் அய்யாக்கண்ணு

Karur Farmers : இரண்டு தலைமுறைக்கு மேல் கோவில் நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளை காலி செய்து, நிலத்தை ஏலம் விட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை திரும்பப்பெறாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு மற்றும் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மகிளிப்பட்டி கிராமத்தில் இரண்டு தலைமுறைகளாக குத்தகை அடிப்படையில் கோயில் நிலத்தில் விவசாயம் செய்து வரும் பொதுமக்களுக்கு விரோதமாக ஏலம் விடப்போவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியது. அதனால் கோயில் நிலத்தை பொது ஏலம்விடக்கூடாது எனக் கூறி 100 க்கும் மேலான விவசாயிகள், விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கரூர் மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை இரண்டு தலைமுறைக்கு மேல் விவசாயிகள் குத்தகை செலுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

சோளிஸ்வர நாதர் கோவில் நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் அதற்கான வரியும் கட்ட தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் புதிதாக வந்துள்ள கோவில் செயல் அலுவலர், கோவில் நிலத்தை ஏலம் விடப்போவதாக  கூறி வருகிறார்.

தலைமுறை தலைமுறையாக குத்தகை செலுத்தி கோவில் நிலங்களில் விவசாயம் செய்து வருவோருக்குதான் நிலத்தை வழங்க வேண்டும். கோவில் நிலத்தில் கடை, வீடு உள்ளிட்டவைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றிற்கான வாடகையை கூட சரியாக கட்டுவதில்லை.

Also see... சிங்கப்பூர் வேலை.. ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடி

ஆனால் விவசாயிகள் விவசாயம் செய்தும் முறையாக வரியும் கட்டி வருகின்றார்கள். அவர்களின் வாழ்வாதாரமாக இருந்த விவசாய நிலத்தை தற்போது புதிதாக ஏலம் விடப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பை கைவிட வேண்டும். மீறினால் வருகின்ற 13ஆம் தேதி கிருஷ்ணராயபுரத்தில் உள்ள கோவில் செயல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

top videos

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்

    First published:

    Tags: District collectors, Farmers, Karur