முகப்பு /செய்தி /கரூர் / மக்களிடம் காசு இல்ல... களையிழந்த தீபாவளி... கரூரில் காத்து வாங்கும் பஜார்..!

மக்களிடம் காசு இல்ல... களையிழந்த தீபாவளி... கரூரில் காத்து வாங்கும் பஜார்..!

வெறிச்சோடிய பஜார்

வெறிச்சோடிய பஜார்

Karur | கரூரில் தீபாவளி கொண்டாட்டம் சற்று களை இழந்து காணப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur | Karur | Tamil Nadu

கரூரில் பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால், முக்கிய கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கரூர் மாவட்டத்தில்  முக்கிய மூன்று தொழில்களாக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், பேருந்து கூண்டு கட்டும் நிறுவனங்கள், கொசு வலை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது.

இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் சரிவர செயல்படாத காரணத்தால் லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க | கரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து 2 வயது குழந்தை பலி - தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றபோது சோகம்

மேலும் நூல் விலை ஏற்றத்தால் ஜவுளி நிறுவனங்கள் செயல்படவில்லை. பேருந்து கூண்டு கண்டும் நிறுவனங்களுக்கு அரசின் டெண்டர் வழங்கப்படாத காரணத்தால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை  தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், கரூரில் முக்கிய தொழில்கள் மூன்றும் முடங்கியுள்ளது.

பணியாளர்களுக்கு சரிவர சம்பளம் மற்றும் போனஸ் வழங்கப்படாத நிலையும் ஏற்பட்டது.

இதனால் கரூரில் தீபாவளி கொண்டாட்டம் சற்று களை இழந்து காணப்படுகிறது. குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார், பழைய திருச்சி சாலை, கோவை ரோடு, மார்க்கெட் பகுதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஒரு வாரங்கள் சிறப்பு தரைக்கடை. தள்ளு வண்டி கடைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் டெக்ஸ்டைல் நிறுவனம், கொசுவலை தொழிற்சாலை, பேருந்து கூண்டு கட்டு நிறுவனங்களில் வேலை இல்லாத காரணத்தால் இரண்டு தினங்களுக்கு முன்பாக மட்டுமே தரைக்கடை அமைக்கப்பட்டது. அந்த தரைக்கடைகளும் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.  இதனால் வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.

செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்

First published:

Tags: Deepavali, Diwali, Karur