Home /News /karur /

கரூரில் தண்ணீர் கூட உள்ளே செல்ல முடியாதபடி மரங்களைச் சுற்றி தார் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்

கரூரில் தண்ணீர் கூட உள்ளே செல்ல முடியாதபடி மரங்களைச் சுற்றி தார் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்

கரூர் மரம்

கரூர் மரம்

karur | சாலை ஓரங்களில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற முடியாத அளவிற்கும் மழை வந்தால்கூட தண்ணீர் செல்ல முடியாத வகையில் தார் சாலைகளை அமைத்தவர்களை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India
    கரூரில் சாலையோரங்களில் நிழல் தரக்கூடிய வகையில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் உள்ளே செல்ல முடியாத வகையில் மரங்களைச் சுற்றி தார் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் இருந்து கோவை சாலை திருக்காம்புலியூர் வரை தார் சாலை போடும் பணியில்  நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் நிழல் தரும் வகையில் வைக்கப்பட்டுள்ள மரங்கள் மீது சிமெண்ட் கப்பிகள் போடப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.



    இவ்வாறு கொதிக்கும் தாரினை ஊற்றி அந்த மரங்களை அழிக்க முயற்சிக்கும் ஒப்பந்ததாரரின் செயலை கண்டித்தும், அதை  கண்டுகொள்ளாத மாவட்ட நெடுஞ்சாலைத்துறையை கண்டித்தும் கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    Also see... ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு...

    கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் இந்த கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Karur, Naam Tamilar katchi, Protest

    அடுத்த செய்தி