முகப்பு /செய்தி /கரூர் / ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றிய மாணவிகள்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு..

ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றிய மாணவிகள்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு..

மாணவிகளை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாணவிகளை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Karur News : கரூரில் அரசு விழாவில் 2 அரசு பள்ளி மாணவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

கரூரில் அரசு விழாவில் சரளமான ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி புத்தகங்களை பரிசளித்தார்.

கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் "ஆங்கில நண்பன்" என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகள் இருவர் ராயனூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அப்போது நிகழ்ச்சியில், 2 மாணவிகளும் சரளமான ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண் குழந்தைகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் குறித்து ஆங்கிலத்தில் கம்பீரமாக எடுத்துரைத்த மாணவிகளை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார். மேலும் இருவருக்கும் புத்தகங்களை பரிசளித்தார். இதனை மாணவிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி அவருக்கு நன்றி தெரிவித்துகொண்டனர். இந்த விழாவில் ஏராளாமனோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : கார்த்திகேயன் - கரூர்

First published:

Tags: DMK, Karur, Local News, Udhayanidhi Stalin