Home /News /karur /

குஜராத், கர்நாடகாவை விட தமிழ்நாட்டில் மின்கட்டணம் குறைவுதான் - அமைச்சர் செந்தில் பாலாஜி

குஜராத், கர்நாடகாவை விட தமிழ்நாட்டில் மின்கட்டணம் குறைவுதான் - அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

கர்நாடகாவில் 100 யூனிட் வரைக்கும் ரூ.4.30, குஜராத்தில் ரூ.5.25 மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India
    தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மற்ற மாநிலங்களை விட குறைவாகவே  மின் கட்டணம் உள்ளதாக செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு மின் நுகர்வோரின் பயன்பாட்டுக்கு ஏற்ப, மின் கட்டண உயர்வு சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு அதிமுக, பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் நிபந்தனைகளால், கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழில்லை என மின்வாரியம் விளக்கம் அளித்தது.

    ஆனால், தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் பற்றாக்குறையை விட, கூடுதலாக லாபம் கிடைக்கும் வகையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அதிமுக தொண்டர்களிடையே பேசிய அவர், சராசரியாக 3-ல் ஒரு பங்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: மின் கட்டண உயர்வுதான் திராவிட மாடல் போலும்... ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

    இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின் கட்டணம் மிகக் குறைவாகவே இருப்பதாக தெரிவித்தார். கர்நாடகாவில் 100 யூனிட் வரைக்கும் ரூ.4.30, குஜராத்தில் ரூ.5.25 மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

    தமிழ்நாட்டில் 100 யூனிட்டிற்குள்ளாக மினசாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடி பேர் வரை இருப்பதாகவும், அவர்களுக்கு எந்தவித கட்டண உயர்வும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மற்றவர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள கட்டணமும் ஏற்றுக் கொள்ளும்படியாகவே இருப்பதால், மக்களிடையே அதிருப்தி இல்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: EB Bill, Gujarat, Karnataka, Senthil Balaji, Tamilnadu

    அடுத்த செய்தி